புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோடிகளில் சம்பளம் வாங்கும் கீர்த்தி சுரேஷ்.. 32 வயதில் சேர்த்து வைத்த மொத்த சொத்து மதிப்பு இதுதான்

Keerthy Suresh Networth: முன்னணி ஹீரோயின்களின் பட்டியலில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் இன்று தன்னுடைய 32 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் ரகுதாத்தா வெளியானது.

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்த நடித்து வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா வெளியாக இருக்கிறது. இப்படி பிஸியாக நடிக்க வரும் கீர்த்தி கைவசம் தற்போது மூன்று படங்கள் இருக்கிறது.

மேலும் தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கும் இவர் தற்போது ஒரு படத்திற்கு நான்கு கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். அதன்படி தற்போது வரை அவர் சேர்த்து வைத்திருக்கும் மொத்த சொத்து மதிப்பு பற்றி இங்கு விரிவாக காணோம்.

கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு

இதில் கீர்த்திக்கு சென்னையில் 6 கோடி மதிப்புள்ள வீடு இருக்கிறது. அதேபோல் பிஎம்டபிள்யூ உட்பட பல கார்களை இவர் வைத்திருக்கிறார். இதன் மொத்த மதிப்பு மட்டுமே 3.5 கோடி என்கின்றனர்.

அது மட்டும் இன்றி சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இதன் மூலமும் அவருக்கு கணிசமான வருமானம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இவருடைய ஆண்டு வருமானமே 10 கோடியை நெருங்கும்.

இதை கணக்கிட்டு பார்க்கும்போது தற்போது அவர் சேர்த்து வைத்த மொத்த சொத்து மதிப்பு 45 கோடியாக உள்ளது. 32 வயதில் இந்த அளவுக்கு உழைத்து அவர் சொத்துக்களை சேர்த்து வைத்திருப்பது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இன்று அனைவரின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் இந்த மகாநடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Trending News