புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஒரு தடவைக்கு பத்து லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லனா நடையைக் கட்டு என்ற பிக்பாஸ் நடிகை

தமிழ் சினிமாவில் நடிகையாக ஆசைப்பட்டு ஹீரோயினாகவும் சில படங்களில் நடித்து ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாததால் சின்னத்திரை பக்கம் வந்தவர் தான் அந்த நடிகை. இவரும் வாரிசு நடிகைகளில் ஒருவர்தான்.

அது என்னமோ தெரியவில்லை, இந்த நடிகையைப் பார்த்த உடனேயே ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது. உருவத்தைப் பார்த்து ஏமாந்து விட்டார்கள் ரசிகர்கள். பெரிய முதலாளி வீட்டிற்குள் சென்ற பிறகுதான் அந்த நடிகையின் உண்மை முகம் தெரிந்தது.

அத்தனையும் பாசாங்கு என்பதைக் கண்டுபிடித்த ரசிகர்கள் இணையதளங்களில் அந்த நடிகையை பந்தாடி விட்டனர். இதன் காரணமாக முன்னர் போல அடிக்கடி சமூக வலைதள பக்கம் வராமல் அவ்வப்போது தலை கட்டிக் கொண்டிருக்கிறார்.

பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று வந்த பின்னர் தமிழ் சினிமாவில் அடுத்த நயன்தாரா நாம்தான் என்ற கனவில் சென்றவரை கடைசி வரைக்கும் நீ சமையல்காரி தான் என உணர வைத்து விட்டார்கள் ரசிகர்கள்.

இருந்தாலும் வயித்து பொழப்புக்கு ஏதாவது வேலை செய்தாக வேண்டும் தானே. இருக்கிற கொஞ்சநஞ்ச பெயரையும் புகழையும் வைத்துக் கொண்டு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அழகுசாதனப் பொருட்களுக்கு புரமோஷன் செய்து வருகிறார்.

இதற்காக ஒரு பொருளை புரோமோஷன் செய்வதற்கு 10 லட்சம் பில் போடுகிறாராம். ஹீரோயினாகி சம்பாதிக்கலாம் என இருந்தவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கிடைக்கும் வாய்ப்புகளில் நன்றாக சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென அநியாயத்திற்கு பணம் கேட்டு வருகிறாராம்.

Trending News