சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

அப்பா, மகனுடன் ஜோடி போட்ட 5 நடிகைகள்.. என்ன கொடுமை சார் இது!

முன்பு ஒரு காலத்தில் நடிகைகள் அப்பாவுக்கு ஜோடி போட்டு பின் மகனுக்கும் ஜோடி போட்ட சம்பவம் தமிழ்சினிமாவில் நடந்துள்ளது. இப்படி நடித்த 5 நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த காலத்தில் ஒரு நடிகைக்கு சினிமாவின் ஆயுட்காலம் என்று பார்த்தால் 7 முதல் 10 வருடம் தான் அதற்குள் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதித்துக் கொள்ள வேண்டிய தான்.

அம்பிகா: நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் 1984 இல் வெளியான வாழ்க்கை திரைப்படத்தில் நடிகை அம்பிகா நடித்திருந்தார். அவருடைய மகனான பிரபுக்கு ஜோடியாக வருங்கால தூண்கள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ambika-cinemapettai
ambika-cinemapettai

ராதா: பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜிகணேசனுடன் முதல் மரியாதை படத்தில் நடித்திருந்தார் ராதா. இளைய திலகம் பிரபுவுடன் ஆனந்த் என்ற திரைப்படத்தில் ராதா இணைந்து நடித்திருந்தார்.

லட்சுமி: சிவாஜிகணேசனுடன் லட்சுமி நெஞ்சங்கள் திரைப்படத்தில் நடித்திருந்தார். 1988 இல் வெளியான என்னுயிர் கண்ணம்மா என்ற படத்தில் பிரபுவுடன் இணைந்து லட்சுமி நடித்திருந்தார்.

காஜல் அகர்வால்: சிரஞ்சீவியுடன் கைதி நம்பர் 150 என்ற படத்தில் நடித்திருந்தார். அவருடைய மகன் ராம்சரணுடன் 2009 இல் வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமன்னா: சிரஞ்சீவியுடன் சிரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடித்திருந்தார். அவர் மகன் ராம்சரணுடன் ரச்சா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Trending News