தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் தற்போது போதை வழக்கில் சிக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் தமிழில் நடித்துள்ள இந்த நடிகையை தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் நடிக்க வைக்க தயக்கம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.
படங்களில் இரட்டை வசனம் பேசுவது, ஓவராக ரொமான்ஸ் காட்சியில் நடிப்பது என தொடர்ந்து சேட்டை செய்து அந்த நடிகையை இனி தங்களது படங்களில் நடிக்க வைக்க முடியாது என்பதால் பல இயக்குநர்களும் நடிகையை காப்பாற்ற முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.
அதற்கு காரணம் அந்த சிங் நடிகை போதை மருந்து வைத்திருந்ததாக போலிசே விசாரணை நடைபெற்றது. அதில் கையும் களவுமாக மாட்டி விட்டார். அதனால் அவர் நடிக்க இருந்த பட வாய்ப்புகளும் கையை விட்டுப் போனது. அடுத்து இனி நாம என்னதான் செய்யப்போகிறோம் என தெரியாமல் சக நடிகைகளுடன் புலம்பி வருகிறார்.
இது மட்டும் அல்லாமல் அந்த நடிகை நடித்து வந்த படங்களில் இருந்தும் ஒதுக்கி உள்ளனர். அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகையிடம் சம்பளத்தை திருப்பி கேட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். ஆனால் அந்த நடிகை சார் கண்டிப்பா இன்னும் 3 மாசத்துல வெளில வந்துருவேன் ஒன்னும் பிரச்சனை இல்ல இனி சீக்கிரமா வந்து படத்தை முடித்துக் கொடுக்கிறேன் என தயாரிப்பாளரிடம் கெஞ்சி வருகிறார்.
ஆனால் படத்திற்கான வட்டியை நான் எப்படி கட்டுவது என தயாரிப்பாளர்கள் கேட்டதற்கு படத்தின் வட்டியும் சேர்த்து நானே கட்டிக்கிறேன் நம்புங்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு காரணம் இக்கட்டான சூழ்நிலையில் படவாய்ப்புகள் இல்லாமல் போனால் அதன் பிறகு ஒரு பட வாய்ப்பு கூட வராது. இதனை புரிந்துகொண்ட அந்த நடிகை அதிலிருந்து தப்பிப்பதற்காக எல்லாரிடமும் பேசி வருகிறார்.
போதை வழக்கில் சிக்கினாலும் அந்த நடிகைக்கு பட வாய்ப்பு வருகிறது என ஒரு கதையைக் கட்டி விட்டால்தான் அடுத்து 5 வருடங்களுக்கு படங்களில் நடிக்க முடியும். பட வாய்ப்புகளும் வரும் என்பதால் இந்த மாதிரி அந்த போதை நடிகை செய்து வருவதாக கூறி வருகின்றனர். இதனால் ஒரு சிலர் ஒரு காலத்தில் புகழ் போதையில் யாரையும் மதிக்காமல், கண்டுகொள்ளாமல், திமிராக நடந்த நடிகைக்கு இதையெல்லாம் தேவைதான்என கூறி வருகின்றனர்.