புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

10 வருடம் குடியினால் கேரியரை சீரழித்த நடிகை.. விஜய் சூர்யா என ரவுண்டு கட்டியும் பயனில்லை

Talented Actress Addicted to alcohol: ஆரம்பத்தில் விஜய், சூர்யா, அஜித் என ரவுண்டு கட்டி நடித்தும் இப்பொழுது நடிகை ஒருவர் எந்த ஒரு படமும் கைவசம் இல்லாமல் அக்கடதேசம் நோக்கி படையெடுத்துள்ளார். வயதான ஹீரோகளுக்கு ஜோடி போட்டு வருகிறார். மீண்டும் எப்படியாவது தமிழில் தன் கேரியரை நிலை நிறுத்த வேண்டுமென போராடிக் கொண்டிருக்கிறார்.

டான்ஸ், பாட்டு என பட்டையை கிளப்பும் அந்த நடிகையின் நடிப்பு 50 சதவீதம் ஏற்றுக் கொள்ளலாம். சற்று குரல் வளம் இல்லாததால் ஆரம்பத்தில் பல பேரின் கேலி கிண்டலுக்கு ஆளானார். இருந்தாலும் மாடர்ன் நடிகை என்ற லிஸ்டில் நிறைய படங்கள் நடித்து வந்தார்.

பெரிய நடிகரின் வாரிசு என்ற அடிப்படையில் கூட அம்மணிக்கு பல தயாரிப்பாளர்கள் வலிய வந்து படங்கள் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தனர். அப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் பார்ட்டி, பப் என தனது கேரியரை சீரழித்து விட்டார் நடிகை.

Also Read: ஆசை தம்பிக்கு அல்வா கொடுத்த விஜய்.. அரசியலை விட நடிப்புதான் முக்கியம்னு தளபதி 69-க்கு கமிட்டான தளபதி

புலி, ஏழாம் அறிவு, பூஜை, வேதாளம் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் நடிகை ஸ்ருதிஹாசன். நன்றாக நடமாடும் திறமை கொண்டவர். அது மட்டும் இன்றி பாடல்களை பாடவும் செய்வார். இப்படி பன்முகத் திறமை கொண்ட அவருக்கு ஒட்டிக்கொண்டது மதுப்பழக்கம்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டு காலம் மது இல்லாமல் அவர் இரவை கழிக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். அப்படி போதைக்கு அடிமையான அவரை சினிமா இப்பொழுது மெல்ல மெல்ல கைவிட தொடங்கிவிட்டது. பாலையா,  சிரஞ்சீவி போன்ற வயதான ஹீரோக்களுக்கு இப்பொழுது ஜோடி போட்டு வருகிறார்.

சுருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதனை கூறியிருந்தார். அப்படி போதைக்கு அடிமையான காலத்தில் இருந்து இப்பொழுது மீண்டு விட்டதாகவும் முழு நேரமும் சினிமாவில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி எல்லோருடைய வாழ்க்கையிலும் அப்படி ஒரு கடினமான பக்கம் இருக்கும் என்றும் விளக்குகிறார்.

Also Read: விஜய் மேல் விழுந்த மிகப்பெரிய கரும்புள்ளி.. ஒரே நாளில் கெட்ட பெயரை மாற்றிய தளபதி

Trending News