திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கணவரின் குடும்பத்தால் குடி போதைக்கு அடிமையான நடிகை.. 600 படங்களில் நடித்தும் கழட்டிவிட்ட கணவர்

சினிமாவில் இருக்கும் சில பிரபலங்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள தவறி விடுகின்றனர். அதிலும் 600 படங்களுக்கு மேல் நடித்த நடிகை ஒருவரை அவருடைய கணவர் திடீரென்று விவாகரத்து செய்து விட்டார்.

காரணம் அந்த நடிகை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், ‘எப்பொழுதுமே போதையிலேயே இருக்கக்கூடிய அவருடன் எப்படி வாழ முடியும்’ என்று அவருடைய கணவர் விவாகரத்து செய்துள்ளார். இவரும் ஒரு நடிகர் தான், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் சேர்ந்து நடித்த இந்த ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டது.

Also Read: குடும்பத்திற்காக மெழுகுவர்த்தியாய் மாறிய நடிகை.. தன்னைத் தானே அழித்துக் கொண்ட கொடுமை

ஆனால் ஒரு மகள் இருக்கும் நிலையில், அந்த நடிகையை காதல் கணவர் திடீரென்று கழட்டி விட்டார். இந்த நடிகைக்கு திருமணத்திற்கு முன் மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அதை திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபத்தில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருப்பது, ஒரு கடத்தில் பொறுமையை இழந்த கணவர் அவரோடு வாழ முடியாது என விவாகரத்திற்கு சென்று விட்டார். இதனால் அவருடைய மகளையும் கணவரிடமே ஒப்படைத்தனர்.

Also Read: அம்மா நடிகையுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகர்.. முதல் படத்திலேயே அப்பா மானத்தை குழி தோண்டி புதைச்சுட்டாங்க

விவாகரத்துக்கான காரணம் கேட்டபோது, அந்த நடிகை 24 மணி நேரமும் குடிக்கக்கூடிய குடிகாரியாக மாறிவிட்டார் என்று சர்ச்சையை ஏற்படுத்தினார். இதைப் பற்றி அந்த நடிகையிடம் கேட்டபோது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூட்டாக அமர்ந்து மது அருந்துவார்கள். அவர்களால் தான் எனக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டது என்று பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அதன்பின் அந்த நடிகை பொறியாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தது. தற்போது அந்த நடிகை மதுப்பழக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து விட்டார். இப்போது சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: 10 முறை கருக்கலைப்பு, பிள்ளைகளுக்காக செய்த அந்தரங்க தொழில்.. தப்புன்னு தெரிஞ்சும் தறிக்கெட்டு திரியும் பிரபலம்

Trending News