சில இயக்குனர்களின் மகள்கள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்களின் மத்தியிலும் ஸ்பெஷல் ஆகவே பார்க்கப்படுகிறார். இவருடைய சமீபத்திய பேட்டிகள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
கடந்த வருடம் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அதிதி சங்கரின் பத்தாம் வகுப்பு மார்க் என்ன என்பதை அவரே தற்போது வெளிப்படையாகத் தெரிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவருக்கு இன்னமும் தன்னுடைய பத்தாம் வகுப்பு மார்க் நியாபகம் இருக்கிறதாம்.
Also Read: பாவாடை தாவணிக்கு குட் பை.. மாடர்ன் உடையில் போட்டோக்களை விட்ட அதிதி சங்கர்
அறிவியல் 99, கணிதம் 97, பிரெஞ்ச் 97, சமூக அறிவியல் 91, ஆங்கிலம் 91 என்று தனது பத்தாம் வகுப்பு மார்க் பற்றி வெளிப்படையாக சொல்லி உள்ளார். இப்படி 90க்கு மேல் அனைத்து பாடப் பிரிவுகளிலும் வாங்கிய அதிதி சங்கர், சிறுவயதிலிருந்தே படிப்பதை ஏனோதானோ என்று படிக்காமல் அதிலும் கெட்டிக்காரராகவே தான் இருந்திருக்கிறார்.
பெரும்பாலும் நடிகைகளுக்கு படிப்பு வராது என்ற காலம் எல்லாம் மலையேறி போனது. சாய்பல்லவியை தொடர்ந்து தற்போது அதிதி சங்கரும் டாக்டர் ஆக இருந்து கொண்டு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு, முன்னணி நடிகையாக வலம் வர முயற்சி செய்கிறார்.
Also Read: தமிழ் சினிமாவை ஆட்சி செய்யும் 6 வாரிசு நடிகைகள்.. முதல் படத்திலேயே பல வித்தை காட்டிய அதிதி ஷங்கர்
தற்போது அதிதி சங்கர் கார்த்தியுடன் நடித்த முதல் படமான விருமன் படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சிம்புவுடன் மற்றொரு படத்திலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
படிப்பில் செம ஸ்மார்ட் ஆக இருக்கும் அதிதி சங்கர் தன்னுடைய முதல் படமான விருமன் படத்தில் சுமாராகத்தான் நடித்திருந்தார். எடுத்த எடுப்பிலேயே எல்லாருக்கும் நடிப்பு வராது. இருந்தாலும் டாக்டர் ஆக இருக்கும் அதிதி சங்கர் பேசாமல் நடிப்பை விட்டுவிட்டு மேற்கொண்டு படிக்க போகலாம் என அவருடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை தெரிந்த பிறகு நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர்.
Also Read: அதிதிக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. உண்மையிலேயே இது ஷங்கர் மகளாக இருப்பதால் வந்த அந்தஸ்து