பிரபல நடிகை ஒருவர் சமீபகாலமாக தன்னுடன் யாரேனும் நடிகர் நெருக்கமாகப் பழகத் தொடங்கினால் உடனடியாக அவர்களை கட் செய்துவிட்டு நம்பரை பிளாக் செய்து விடுகிறாராம். அந்த அளவுக்கு சொந்த விஷயத்தில் நொந்து போய் விட்டாராம் அந்த நாயகி.
ஆங்கிலேய ரத்தமான அந்த நடிகை சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க முடிவு செய்து அதற்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இன்று வரையிலும் நல்ல நடிகை நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமையும். ஆனால் கடைசியாக வந்த டாப் நடிகரின் படத்தில் அந்த நடிகையை ஊறுகாய் அளவுக்கு கூட பயன்படுத்தவில்லை.
இது ஒருபுறமிருக்க சமீபகாலமாக தன்னுடன் நெருக்கமாக பழக நினைக்கும் நடிகர்களை உடனே கட் செய்து அனுப்பி விடுகிறாராம் அந்த நடிகை. ஏற்கனவே இந்த நடிகை அரசியல் பின்புலம் உள்ள நடிகர் ஒருவருடன் நீண்ட வருடம் உறவு வைத்திருந்ததாக ஓப்பனாக தெரிவித்திருந்தார்.
மேலும் அதை ஒரு புத்தகத்தின் மூலம் வெளியிடப் போவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த விஷயம் அப்படியே அமைதியாகி விட்டது. மேலும் அந்த நடிகை எந்த ஒரு நடிகருடன் நடித்தாலும் கிசுகிசு கிளம்பிவிடுகிறது. இப்படித்தான் 60வயது நடிகர் என்று கூட பார்க்காமல் அநியாயத்திற்கு ஆபாசமாக சேர்த்து பேசி விட்டார்களாம்.
இதனால் நொந்து போன நடிகை பெருசோ, சிறுசோ எதுவாக இருந்தாலும் எட்டடி தள்ளியே நில்லுங்கள் என கூறி வருகிறாராம். மேலும் மாஸ் நடிகர்களின் படங்களில் நடிக்க மாட்டேன் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம்.