செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்த 5 அற்புதமான படங்கள்..பெத்த லாபத்தால் வரிசை கட்டி நிற்கும் தயாரிப்பாளர்

Actress Aishwarya Rajesh: சவாலான கேரக்டரையும் அசால்டாக பண்ணி தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்து சிறந்த நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.  வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னையின் மூலம் நன்கு பரீட்சையப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் தொடர்ந்து வெரைட்டியான கதைகளை செலக்ட் செய்து நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா நடித்த படங்களில் பர்கானா போன்றவை சர்ச்சைக்குள்ளான போதும் வசூலில் நல்ல லாபத்தை சம்பாதித்தது. இதன் மூலம் இயக்குனர்களின் விருப்ப தேர்வாகவும் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாத சம்பள விஷயத்தில் கறாராக இல்லாமல் வெற்றி படங்களை கொடுப்பதால் தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸ் ஆகவும் ஐஸ்வர்யா திகழ்கிறார். அவர் நடித்த படங்களில் சில,

கனா: பெண்கள் முன்னேற முட்டுக்கட்டை போடும் உலகில் பெண்கள் கிரிக்கெட்டை கையில் எடுத்து அதில் முற்போக்கு சிந்தனையுடன் விவசாயி ஆன தன் தந்தையின் வலியை சொன்ன விதம் அற்புதமாக அமைந்திருந்தது. ஐஸ்வர்யா ராஜேஷின் கனா வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்  வெற்றியடைந்தது.

ரம்மி: கிராமத்து சப்ஜெக்ட்டான ரம்மியில் காதலனை கொன்றவர்களை பழிவாங்கும் தமிழச்சியாக படத்தை தூக்கி நிறுத்தி இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Also Read: தனிக்காட்டு ராணியாக வாய்ப்புகளை அள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆப்படிக்க வந்த 2 ஹீரோயின்கள்

திட்டம் 2(பிளான் பி): , முதன்மையான கதாநாயகியாக காவல்துறை அதிகாரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த படம்  பிளான் பி.  க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லராக உள்ள இந்த படத்தில் காதல் ஆக்சன் இரண்டையும் இடத்திற்கு தகுந்தவாறு வெளிப்படுத்தி  இருந்தார். கொரோனா இரண்டாம் நிலை காரணமாக  இப்படம்  ஓடிடியில் வெளியாகி இருந்தது.

டிரைவர் ஜமுனா: பெண் டாக்ஸி டிரைவரை மையமாகக் கொண்டு சுழலும் திரில்லர் கதையில் நேர்மையான அரசியல்வாதியை காப்பாற்றும்  துடிப்புமிக்க டிரைவராக நடித்திருந்தார் இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அமைதியான கோபத்தை ஆற்றல் மிக்க நடிப்பினால் வெளிப்படுத்தி சபாஷ் போட செய்திருந்தார்

த கிரேட் இந்தியன் கிச்சன்: மலையாளத்து  ரீமேக் ஆன இப்படத்தில் பெண்களின் வலியை அழுத்தமாகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராக வெகுண்டு எழுந்த புரட்சி பெண்ணாகவும்  இரு வேறு உணர்ச்சிகளை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது கைவசம் தமிழ் மலையாளம் என கைவசம் ஐந்து படங்களை வைத்திருக்கும் ஐஸ்வர்யா  வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு எப்போதும் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருக்கிறார்.

Also Read: ஜொலிக்க முடியாமல் போன வெற்றி பட நாயகி.. ஐஸ்வர்யா ராஜேஷ் போல் வளர முடியாத ஹீரோயின்

Trending News