ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சொந்த மாநிலத்தில் அசிங்கப்படுத்தப்பட்ட அமலாபால்.. துரத்தியடிக்கப்பட்ட அவலம்

தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் இவர் நடித்த மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். நடிகர் விஜய்யின் ஜோடியாக தலைவா படத்திலும் நடித்தார். அதன் பின்னர் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தார்.

இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. கேரளாவில் குருவாயூர் கோவிலில் மாற்று மதத்தவர் நுழைவது என்பது இன்று வரை அனுமதிக்க படாத ஒன்று. அதேபோல் தான் கேரளாவின் கொச்சியில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலிலும் மாற்று மதத்தவர் செல்லக்கூடாது என்பதை ரொம்பவும் கண்டிப்புடன் பின்பற்றி வருகின்றனர்.

Also Read: 2022-ல் சர்ச்சையில் சிக்கிய 6 நடிகைகள்.. மீடியாவையே கிடுகிடுக்க வைத்த இரவின் நிழல் நாயகிகள்

கேரளாவிலேயே பிறந்து வளர்ந்த நடிகை அமலாபால் இந்த விஷயம் தெரியாமல் அந்த கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய முற்பட்டபோது கோவில் வாசலில் வைத்தே தடுத்து நிறுத்தப்பட்டார். தன்னால் முடிந்தவரை நடிகை அமலா பால் கோவில் நிர்வாகத்திடம் எவ்வளவோ பேசிப் பார்த்தார். ஆனால் கோவில் நிர்வாகத்தினர் அவரை உள்ளே விடவில்லை.

கோவிலுக்குள் அனுமதிக்க படாததால் ஏமாற்றம் அடைந்த நடிகை அமலாபால் தனது கருத்துக்களை கோவிலில் உள்ள பதிவேட்டில் பதிவிட்டார். இந்த காலத்திலும் மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் மதத்தை மட்டுமே பார்க்கின்றனர். இது கூடிய விரைவில் மாறும் என நம்புகிறேன் என்று மிகுந்த வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

Also Read: வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் அமலாபாலுக்கு இப்படி ஒரு எண்ணம்மா.? வெளிப்படையாய் கூறிய அந்த விஷயம்

இது குறித்து திருவைராணிக்குளம் மகாதேவர் கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள், ஒரு சாமானிய மனிதனாக இப்படி வந்து சென்றால் அது வெளியில் தெரியாது. ஆனால் இதுபோன்ற பிரபலங்கள் கோவிலின் கட்டுப்பாட்டை மீறி உள்ளே வந்து சென்றால் இந்தக் கோவில் நடைமுறையை நிர்வாகத்தினர் பின்பற்றவில்லை என்று பிரச்சினைகள் எனக்கூடும் என்று தங்கள் தரப்பு நியாயத்தை கூறினர்.

சாமியை தரிசிக்க வந்த அமலா பால் மாற்று மதத்தவர் என்பதால், கோவிலின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு கோவிலின் உள்ளே அனுமதிக்கப்படாததால் வாசலிலேயே நின்று வருத்தத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பினார். நடிகை அமலாபால் இந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்படாதது இப்போது வலைதளங்களில் பேசு பொருளாகி வருகிறது.

Also Read: திருமணத்திற்குப் பின்பும் திருந்தாத அமலாபால்.. ஃபர்ஸ்ட் டேட்டிங், அப்புறம் கேஸ் இது அல்லவா வாழ்க்கை

Trending News