தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார்.
என்னதான் அமலா பால் அறிமுகமானது மலையாள திரையுலகில் என்றாலும், தமிழில் ‘மைனா’ படத்தில் நடித்ததின் மூலம் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார். இதனைத் தொடர்ந்து தனுஷ், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் அமலா.
மேலும் சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. ஏனெனில் அந்த படத்தில் அமலாபால் ஆடையில்லாமல் நடித்திருப்பார்.

தற்போது நடிகை அமலாபால் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்த நிலையில் தற்போது அமலாபால் நடத்தியுள்ள ஹாட்டான போட்டோ ஷூட்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களின் கண்களைக் குளிர வைக்கிறது.
அந்த வகையில் அமலாபால் செம கெத்து காட்டும் அளவுக்கு மேல் சட்டை பட்டனை திறந்து விட்டபடி, வித்தியாசமான அங்கிள்களில் போட்டோஷூட்களை நடத்தி அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

அத்துடன், ‘என்னால் மாற்றிக் கொள்ள முடியாத விஷயத்தை இனி ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் இப்போது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றுகிறேன். எனவே நீங்கள் வெறுப்பதை ஏற்றுக் கொள்வதை நிறுத்தும்போது உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாக மாறும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது’ என்ற கருத்தையும் தன்னுடைய புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

எனவே இவருடைய இந்த வித்தியாசமான புகைப்படத்திற்கு அவருடைய ரசிகர்கள் பலரும் எக்கச்சக்கமான லைக்குகளைத் தட்டி விடுகின்றனர்.
