செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

2ம் தாரமா இருந்தாலும் பரவால்ல.. வில்லனை ரிஜெக்ட் செய்து நாகார்ஜுனாவுக்கு கழுத்தை நீட்டிய அமலா

Actress Amala: ரீல் ஜோடி ரியல் ஜோடிகளாக மாறுவதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. காலம் காலமாக திரையில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்து விடுகின்றனர்.

அப்படி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் அமலா, நாகார்ஜுனா. இந்த ஜோடிக்கு அகில் என்ற பையன் இருக்கிறார்.

இவரும் இப்போது பிஸியான ஹீரோவாக இருக்கிறார். இந்நிலையில் அமலாவுக்கு காதல் தூது விட்ட 6 அடி வில்லன் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

கோலிவுட்டின் பெருமைக்குரிய வில்லனாக இருக்கும் ரகுவரன் தான் அது. இவர் அமலாவுடன் இணைந்து கூட்டுப் புழுக்கள் என்ற படத்தில் நடிக்கும் போது இம்ப்ரஸ் ஆகி இருக்கிறார்.

அமலாவை காதலித்த ரகுவரன்

அதைத்தொடர்ந்து தன் காதலை அவரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அமலா அதை ஏற்காமல் ரிஜெக்ட் செய்து விட்டாராம். இது ரகுவரனுக்கு தீரா வேதனையை கொடுத்திருக்கிறது.

இதை அவரே பழைய பேட்டியில் தெரிவித்து இருப்பார். அதையடுத்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்த அமலாவுக்கு நாகார்ஜுனா மீது காதல் வந்திருக்கிறது.

அந்த சமயத்தில் நாகார்ஜுனா தன் முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்தார். அதை அடுத்து சில வருடங்களிலேயே அமலா உடன் அவருக்கு திருமணம் நடந்தது.

தற்போது இந்த ஜோடி மனம் ஒத்த தம்பதிகளாக இருக்கின்றனர். ஆனால் ரகுவரன் அமலா மீது காதல் வயப்பட்டது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.

Trending News