Amy Jackson: இப்போதெல்லாம் ஹீரோயின்கள் தங்கள் அழகுகளை பாதுகாக்க என்னென்னவோ செய்கிறார்கள் அதிலும் முன்னணியில் இருப்பவர்கள் இதற்காகவே வாங்குற சம்பளத்தில் பாதி அதாவது கோடி கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகை எமி ஜாக்சன் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி போய் இருக்கிறார் மதராசபட்டினம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் பச்சக் என , ஒட்டிக்கொண்ட இவர் ரஜினி, தனுஷ், விஜய் என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் நடித்தார்.

அதேபோல் சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார் மேலும் ஜார்ஜ் என்பவரை காதலித்த இவர் திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தைக்கு அம்மாவானார்.

ஆனால் அதன் பிறகு காதலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் குழந்தையை தனியாகவே வளர்த்து வந்தார். தற்போது பிரபல நடிகர் எட் பெ வெஸ்ட்விக் உடன் காதலில் இருக்கிறார் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது.
அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய எமி ஜாக்சன்
இந்த சூழலில் எமி தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் அதில் அவர் பார்ப்பதற்கு லேடி மைக்கேல் ஜாக்சன் போலவே இருக்கிறார்.

அதாவது அவருடைய முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல் மாறியுள்ளது மதராசபட்டினத்தில் நாம் பார்த்த க்யூட் முகத்திற்கும் இதற்கும் ஆறு என்ன 60 வித்தியாசங்கள் கண்டுபிடிக்கலாம்.

அந்த போட்டோக்களை பார்க்க ரசிகர்களும் இதைத்தான் கமெண்ட் ஆக கொடுத்து வருகின்றனர் தற்போது நடிகைகள் அனைவரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதேபோல் எமி ஜாக்சனும் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் ஆக மொத்தம் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற கதையாக இருந்த முகத்தை கெடுத்து வைத்துள்ளார்.
விஜய் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
- ரஜினி, ஆளும் கட்சியை சீண்டும் விஜய்
- விஜய் மறக்க முடியாத 50வது பிறந்த நாள்
- விஜய்க்கு போட்டியாக களத்தில் குதிக்கும் சூர்யா