தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற அஜித் படங்களில் அவருக்கு மகளாக நடித்து தல அஜித்தின் ரில் மகள் என்ற பெருமையுடன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது பருவ மங்கையாக மாறி உள்ள அனிகா சுரேந்திரன் முன்னணி ஹீரோயின்களே கண்டு மிரளும் அளவுக்கு போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடற்கரையில் காற்று வாங்க செல்வது போன்ற தன்னுடைய இயல்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்க்கும் அவருடைய ரசிகர்கள் அனிகாவை வர்ணித்து தங்களுடைய கமெண்டுகளை தட்டி விடுகின்றனர். அதேசமயம் ‘கைல செருப்ப தூக்கிட்டு எங்கம்மா போற’ என்று நெட்டிசன்கள் கிண்டலடிக்கவும் செய்கின்றனர்.

எனவே சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் அனிகா, 16 வயதிலேயே சினிமா, மாடலிங், விளம்பரப் படங்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில்,
தற்போது முன்னணி ஹீரோயின்களுக்கு கடும் போட்டியாக மாறி வருகிறார். ஆகையால் அனிகா சுரேந்திரன் விரைவில் கதாநாயகியாக பல படங்களில் பார்ப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.