திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

17 வருட திரை பயணம்.. மிரட்டும் அஞ்சலியின் 50-வது பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அஞ்சலி, அந்த படத்தில் ஆனந்தியாகவே வாழ்ந்திருப்பார். இந்த படம் மட்டுமல்ல அதன் தொடர்ச்சியாக வெளியான அங்காடித் தெரு திரைப்படத்திலும் அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.

இப்படி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அந்த கேரக்டருக்கு ஏற்ப கனக்கச்சிதமாக பொருந்தி நடிக்கும் அஞ்சலி, தன்னுடைய 17 வருடத் திரை பயணத்தில் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். அஞ்சலியின் 50-வது படமான ஈகை என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Also Read: அஞ்சலி-ஜெய் லிவிங் டு கெதர் முறிவிற்கு இதுதான் காரணம்.. பகிரங்கமாக போட்டு உடைத்த பிரபலம்

ஏற்கனவே அஞ்சலி அஜித்தின் மங்காத்தா, சூர்யாவின் சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் அவருடைய நடிப்புக்கு தீனி போடும் வகையில் அமைந்திருந்தது. அதேபோலவே தற்போது அவர் தனது 50-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை அசோக் வேலாயுதம் இயக்குகிறார்/ படத்திற்கு தருண் குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தை கிரீன் அமியூஸ்மென்ட் மற்றும் டி3 ப்ரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நிமிடத்திற்கு முன்பு வெளியாகி மிரட்டி உள்ளது. இந்த போஸ்டரில் அஞ்சலி கொட்டுகிற மலையில் கருப்பு குடைகளுக்கு மத்தியில் சிவப்பு நிற துப்பட்டா அணிந்தபடி மிரட்டலான லுக்கில் இருக்கிறார்.

Also Read: சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வரும் 5 நடிகைகள்.. கொடுத்த கேரக்டராகவே வாழும் அஞ்சலி

திரையுலகில் 50 படங்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல. இவருக்கு இந்த படம் 50ஆவது படம் என்பதால் ஆப் செஞ்சுரி அடித்த அஞ்சலிக்கு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர்.

நிச்சயம் இந்த படம் திரில்லர் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் யோசிக்கின்றனர். எனவே அஞ்சலியின் 50வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பிறகு இந்த படத்தை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அஞ்சலியின் 50-வது படமான ஈகை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

anjali-50-cinemapettai
anjali-50-cinemapettai

Also Read: சினிமாவை தாண்டி ஓ.டி.டி-யும் கைவிட்ட 5 நடிகைகள்.. எல்லா பக்கமும் பேரடி வாங்கிய வாணி போஜன்

Trending News