வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பெரும் ஏமாற்றத்தை சந்தித்த அனுஷ்கா! ஒருவேளை சுத்தமா மார்க்கெட் போச்சோ?

சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா ஷெட்டி, ஹீரோக்களுக்கு இணையாக தனி ஒரு ஹீரோயினாக பல படங்களின் வசூல் சாதனையை மிரள விட்டிருப்பார். குறிப்பாக அருந்ததீ, பாகமதி, பாகுபலி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தற்போது தமிழில் அவருக்கு சமீப காலமாகவே பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதைப்போல் தெலுங்கிலும் ஓரிரு பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. ஆகையால் பாகுபலியை தொடர்ந்து கதையை மிகவும் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார். இருப்பினும் அனுஷ்காவின் திகில் திரைப்படமான  ‘நிசப்தம்’ படத்தை யாரும் வாங்க முன்வராததால், சென்ற வருடம் அக்டோபர் 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் மாதவன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் தற்போது தெலுங்கு டிவி சேனலில் ஒளிபரப்பப்பட்டது, அப்பொழுதும் அனுஷ்கா மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.

anushka-cinemapettai123

ஏனென்றால் ஆந்திரா தெலுங்கானாவில் இந்த படம் மிகக்குறைந்த டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருந்தது. அதாவது 3.85 ரேட்டிங் மட்டுமே பெற்றுள்ளதாம்.

எனவே இந்த தகவலானது சினிமா வட்டாரத்தில் பெரிதும் பேசும் பொருளாக மாறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் அனுஷ்கா தன்னுடைய மார்க்கெட்டை முற்றிலுமாக இழந்து விட்டாரா  என்ற கேள்வியும் அவருடைய ரசிகர்களிடையே எழத் தொடங்கிவிட்டது.

ஹீரோயினை மட்டும் நம்பி படம் எடுக்க சினிமா தயாரிப்பாளர்கள் அவரை நோக்கி இனி செல்ல வாய்ப்பே இல்லை என கிசு கிசுக்கப்படுகிறது.

Trending News