திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நோ என்பதை கற்றுக் கொடுத்த திரையுலகம்.. முதல் படத்தில் வாங்கிய சம்பளத்தை ஒளிவுமறைவின்றி கூறிய அபர்ணா!

நடிகைகளையும் அவர்களது திறமையை வைத்தே ரசிகர்களின் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்பதை நடிகை அபர்ணா பாலமுரளி தற்போது ஆணித்தரமாக கூறியிருக்கிறார். அதிலும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘விஜய் சேதுபதி குண்டா இருந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ள நீங்கள், பப்ளிக் ஆக இருக்கும் என்னைப்போன்ற நடிகைகளையும் ஏற்றுக்கோங்க’ என்று நடிகை அபர்ணா பாலமுரளி கூறியிருக்கிறார்.

பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகைகள் ஸ்லிம்மாகவும் கவர்ச்சியாகவும் இருந்தால் மட்டுமே தங்களது மார்க்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். ஆனால் கதாநாயகர்களுக்கு அப்படியல்ல. அவர்கள் நடித்தால் போதும், அவசியம் சிக்ஸ்பேக் வைத்திருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. இதற்கெல்லாம் ஆதாரமாக இருப்பவர் தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஹீரோ விஜய் சேதுபதி, இவர் விக்ரம் படத்தில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி சட்டையைக் கழட்டி தொப்பையை காட்டினாலும் அதையும் ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்தனர்.

அபர்ணா இசைக் கலைஞர் பாலமுரளி அவர்களின் மகனாக மலையாள திரையுலகில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமாகி, அதன் பிறகு தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து, அதன் பின் நடிகர் சூர்யாவுடன் சூரரைப்போற்று என்ற படத்தில் பொம்மையாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுவிட்டார்.

சமீபத்தில் இவர் நடித்து முடித்த ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் 2 நாட்களுக்கு முன்பு ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்திருக்கிறார். இந்நிலையில் அபர்ணா முதல் முதலாக நடித்த படத்திற்கு வெறும் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியதாகவும், அதுவே தனக்கு கிடைத்த மிகப் பெரிய வெகுமதி. இப்பொழுதும் தன்னுடைய சம்பளம் கோடியை எட்ட விட்டாலும் அன்று வாங்கிய முதல் சம்பளம் எனக்கு மிகப் பெரிய தொகை.

இன்றும் சிங்கிளாக தான் இருக்கிறேன். இப்போது யாரையும் டேட்டிங் செய்யவில்லை. மேலும் பிகினி அணிவது என்னைப் பொருத்தவரை எந்தத் தவறும் இல்லை. தற்போது எனக்கு என்ன உடை பொருந்துமோ அதை அணிந்து கொண்டு நடிப்பதிலேயே விரும்புகிறேன். கிளாமர் ரோல் தனக்கு எப்போது செட்டாகுமோ அப்போது கிளாமர் உடையணிந்து நடிக்கவும் தயார் என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

அத்துடன் சினிமா துறையில் வந்த பின்னர் ஒரு முக்கியமான விஷயத்தை கற்றுக்கொண்டேன். அதாவது எனக்கு ஒவ்வாத கதை, நபர், நட்பு வட்டாரத்திடம் அழுத்தமாக நோ சொல்வதை கற்றுக்கொண்டேன். அதிலும் திரை துறையில் சில விஷயத்திற்கு ஸ்ட்ராங்காக நோ சொல்லவில்லை என்றால், பெரிய பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும் என அபர்ணா பாலமுரளி சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Trending News