செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

விவாகரத்து நடிகரை விடாமல் டார்ச்சர் செய்யும் நடிகை.. இருக்கிற பிரச்சனைல இது வேறயா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அந்த நடிகர். அவருடன் முதல் படத்தில் ஜோடி போட்ட அந்த நடிகை அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அது எதுவும் நடிகைக்கு ஒர்க்கவுட் ஆகவில்லை.

அதனால் நடிகை திரைத்துறையை விட்டு சிலகாலம் காணாமல் போயிருந்தார். அந்த சமயத்தில் ஒரு முக்கிய சேனலின் பிரபல நிகழ்ச்சியில் நடிகை கலந்து கொண்டார். ஆண்டவர் நடத்திய அந்த நிகழ்ச்சியில் நடிகை ரொம்பவே பிரபலம் ஆனார்.

அதோடு அந்த வீட்டில் இருந்த ஒரு நடிகருடன் நடிகை காதல் கிசுகிசுவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிய நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஒரு சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடிகை அவ்வப்போது தலை காட்டி வருகிறார்.

எப்படியாவது சினிமாவில் நடித்து ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்று நினைத்த நடிகை தான் முதலில் ஜோடி போட்டு நடித்த நடிகருக்கு போன் செய்தாராம். அவரிடம் எனக்கு எப்படியாவது ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்.

முதலில் சம்மதித்த நடிகர் பிறகு அவரை கண்டு கொள்ளவில்லையாம். ஆனாலும் நடிகை விடாமல் நடிகரை வாய்ப்பு கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். இதனால் நொந்து போன நடிகர், நடிகைக்கு வேறு படங்களில் நடிக்க சிபாரிசு செய்துள்ளார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத நடிகை நடிகருடன் தான் சேர்ந்து நடிப்பேன் என்று விடாமல் அடம்பிடித்து வருகிறாராம்.

ஏற்கனவே நடிகரின் வீட்டில் பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் பிரச்சனைக்கே இன்னும் முடிவு தெரியாமல் இருக்கும் நிலையில் நடிகையின் இந்த டார்ச்சர் வேறு நடிகரை படாதபாடு படுத்தி வருகிறதாம்.

Trending News