வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பிளேபாய் நடிகர் மீது காதல் மயக்கத்தில் இருந்த பானுப்பிரியா.. உண்மையை சொல்லிக் காப்பாற்றிய இயக்குனர்

Actress Bhanu Priya: எண்பது மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை பானுப்பிரியா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அத்தனை மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். நடிகையாக மட்டுமில்லாமல் சிறந்த பரதநாட்டிய கலைஞரும் ஆவார். சினிமாவில் ஆக்டிவாக இருந்த காலத்தில் சர்ச்சையில் சிக்காத பானுப்பிரியாவின் காதல் கதை தற்போது வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் அந்த பிரபல நடிகர். எந்த அளவுக்கு சினிமாவில் வெற்றி கண்டாரோ அதைவிட அதிகமாக சர்ச்சைகளில் சிக்கியவர். நடிகைகளின் உடன் நெருக்கமான நட்புதான் இவருடைய பெயர் கெட்டுப் போனதற்கு கூட காரணம். அந்த காலகட்டத்தில் பிளேபாய் ஆகவே வலம் வந்தார்.

Also Read:அரசியல் பெரும்புள்ளியுடன் உல்லாசமாக இருந்த குடும்ப நடிகை.. ஒன்னும் தெரியாத பாப்பா போட்டாலாம் தாப்பா

பானுப்ரியா சினிமாவிற்கு வந்த புதிதில் இந்த நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த ஒரு படத்திலேயே இருவருக்கும் காதலும் மலர்ந்து இருக்கிறது. நாளுக்கு நாள் இவர்களுடைய நெருக்கம் அதிகமாக, படப்பிடிப்பு தளங்களிலேயே ஓவர் ரொமான்டிக்காக சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள் இந்த காதல் ஜோடி. பானுப்பிரியா அந்த நடிகரை ரொம்பவும் உருகி உருகி காதலித்திருக்கிறார்.

ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்ததும் அந்தப் படத்தின் இயக்குனர் பானுப்பிரியாவை நேரில் சென்று பார்த்திருக்கிறார். அந்த நடிகரை பற்றி கேட்டபொழுது பானுப்பிரியா தான் அவரை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இது அந்த இயக்குனருக்கு ரொம்பவும் அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. இவரை எப்படியாவது அந்த நடிகரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறார்.

Also Read:பெண்களை வைத்து பலான தொழில் செய்த முரட்டு நடிகை.. விடிய விடிய நடந்த கூத்தால் அரங்கேறிய சம்பவம்

இயக்குனர் உடனே அந்த நடிகர் தங்கி இருக்கும் போன் செய்துவிட்டு, ஸ்பீக்கரில் போட்டு இருக்கிறார். நடிகரிடம் இயல்பாக பேசுவது போல் பேசி அவருடைய காதல் நிலைகள் அத்தனையும் அவரது வாயாலே சொல்ல வைத்திருக்கிறார். மேலும் பானுப்பிரியாவை பற்றி கேட்டபொழுது அந்த பிளேபாய் நடிகர் இதுவும் அந்த லீலைகளில் ஒன்று தான் என்பது போல் பதில் சொல்லி இருக்கிறார்.

பானுப்பிரியாவிற்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு அந்த நடிகரிடம் இருந்து விலகி விட்டார். அதன் பின்னர் சினிமாவில் கவனம் செலுத்திய அவர் நிறைய வெற்றி படங்களில் நடித்தார். 1998 இல் திருமணம் செய்து செட்டிலான பானுப்பிரியா கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

Also Read:முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன், அட்ஜஸ்ட்மென்ட் பண்ண முடியாது.. இயக்குனரின் முகத்திரையை கிழித்த நடிகை

Trending News