சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பாலி**ல் சீண்டலை குறித்து வாயை திறந்த பாவனா.. 5 வருடங்களுக்குப் பிறகு வெடிக்கும் பிரச்சனை!

தமிழ் சினிமாவிற்கு சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்தமான கதாநாயகியாக மாறியவர் நடிகை பாவனா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளில் நடிப்பு தென்னிந்திய கதாநாயகியாக திகழ்ந்தார்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் அவர்களால் கூலிப்படையை ஏவி, பாலி**ல் ரீதியாக பாவனா துன்புறுத்தப்பட்டதாக சமூகவலைதளங்களில் சர்ச்சைகள் கிளம்பியது. இதனால் பிரபல மலையாள நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டு 85 நாட்கள் சிறையில் இருந்த பின்பு, ஜாமீனில் வெளிவந்தார். அதன்பிறகு உச்சநீதிமன்றம் இந்த வழக்கை 6 மாதத்திற்குள் முடித்துவைக்க உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கு குறித்து திலீப்பின் நண்பரும் பிரபல இயக்குனருமான பாலச்சந்திர குமார் தனியார் தொலைக்காட்சிக்கு திலீப்புக்கு எதிராகவும், பாவனாவிற்கு ஆதரவாகவும் பேட்டி கொடுத்திருந்தார்.

தன்னைக் கைது செய்த போலீசாரையும் பழிவாங்கும் எண்ணத்தில் திலீப் இருப்பதாகவும் அந்தப் பேட்டியில் பாலச்சந்திர குமார் குறிப்பிட்டிருந்தார். இது மட்டுமல்லாமல் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதன்பிறகு பாலச்சந்திர குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திலீப் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.

இந்த சூழலில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்போது பாவனா முதல் முதலாக இந்தப் பிரச்சினையை குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘கடுமையான பாதையில் பயணம் செய்த என்னுடைய வாழ்க்கையில் ஐந்து வருடங்களாக சுமத்தப்பட்ட தாக்குதலின் பாரத்தினால் சினிமாவில் சம்பாதித்து வைத்த பேர், புகழ் எல்லாம் நசுக்கப்பட்டு விட்டது. இதில் என்னுடைய குற்றம் எதுவும் இல்லாவிட்டாலும், அவமானம் எனக்கு கிடைத்தது.

என்னை அமைதியாக்கி தன்மைபடுத்தவும் பல முயற்சி நடந்தாலும், அந்த சமயத்தில் எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சிலர் வந்தனர். அப்போதுதான் இந்த யுத்தத்தில் தனி ஆள் இல்லை. எனக்கு தோள் கொடுக்க நிறைய பேர் உள்ளனர் என்பதை உணர்ந்துள்ளேன். எனக்கு தோள் கொடுத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி’ என்று பாவனா அந்தப் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

எனவே இவருடைய பதிவிற்கு ஆதரவாக மலையாள பிரபலங்களான மம்முட்டி, பார்வதி, மோகன்லால், மஞ்சு வாரியர் குரல் கொடுத்துள்ளனர்.. ஆகையால் மலையாள திரையுலகமே தற்போது பாவனாவிற்கு ஆதரவாக உறு துணையாக நிற்பது திரைத்துறையினரை பெருமைப்படுத்தி உள்ளது. அத்துடன் பாவனாவிற்கு ஆதரவாக ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் கருத்துகளை பதிவிட்டு கொண்டிருக்கின்றனர்.

Trending News