தன்னுடைய 16 வயதில், இயக்குநர் கமல் இயக்கிய நம்மால் என்ற படம் மூலம் 2002ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார் நடிகை பாவனா. பின் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.
அதன் பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்காத பாவனா மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திருமணத்திற்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் வரவில்லை.
தற்போது 33 வயதான நடிகை பாவனா மீண்டும் நடிப்பின் மீது ஏற்பட்ட ஆசையினால் பட வாய்ப்பிற்காக விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்திக்கொண்டிருக்கிறார். அப்போது எடுக்கும் புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் அப்லோட் செய்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் பாவனா அவ்வப்போது தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார்.
![actress-bhavana-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/10/actress-bhavana-cinemapettai.jpg)
இவருடைய புகைப்படத்தை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இணையத்தில் குவிந்துள்ளது. தற்போது பாவனா தண்ணீருக்கு அடியில் உள் நீச்சல் போடும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்கள குளிர்ச்சிபடுத்தியுள்ளார்.
எனவே பாவனா வித்தியாசமாக செயலில் ஈடுபடும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்கமான லைக்குகளை தட்டி விடுகின்றனர்.