Bindu Ghosh: 80 காலகட்டத்தில் மனோரமா, கோவை சரளா இருவரைப் போல் காமெடியி கலக்கியவர் தான் பிந்துகோஷ். முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவருக்கு தற்போது 76 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக அவருக்கு உடலில் பல பிரச்சனைகள் இருக்கிறது.
பிபி சுகர் மட்டுமல்லாமல் ஹார்ட் ஆபரேஷன் கூட செய்து இருக்கிறார். தற்போது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கூட இவர் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்.
அதிர்ச்சி கொடுத்த தற்போதைய நிலை
ஒரு காலத்தில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் இவர் சொந்த வீடு கார் என சந்தோஷமாகத்தான் இருந்திருக்கிறார். போகப்போக வறுமையின் காரணமாக சொத்துக்களை விற்கும் நிலைக்கு வந்திருக்கிறார்.
தற்போது வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு இவர் கஷ்டப்பட்டு வருகிறார். தற்போது ஒரு பேட்டியில் தன்னுடைய நிலையை கண்ணீருடன் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய நிலையை தெரிந்து கொண்டு விஷால் ஏற்கனவே பண உதவி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது மருத்துவ செலவுக்கு 5 லட்சம் தேவைப்படுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எனக்கு ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் என அவர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். ஒரு காலத்தில் எப்படி இருந்த பிந்து கோஷ் இப்படி ஆகிவிட்டாரே என அவரைப் பார்த்த எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.