புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்கிறது.. இயக்குனர்களை அல்லல்படுத்தும் இளம் நடிகை

தமிழ் நடிகையாக இருந்தாலும் அக்கட தேசத்தில் தற்போது தனக்கென ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளவர்தான் அந்த நடன நடிகை. காதல் திரைப்படத்தின் மூலம் பக்கத்து மாநிலத்தில் அறிமுகமானார்.

அறிமுகமான படமே அதிரி புதிரி வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது அந்த நடிகைக்கு அக்கட தேசத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. இதன் காரணமாக ஒரு படத்திற்கு இரண்டு முதல் மூன்று கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அக்கட தேசத்தில் இந்த நடிகையின் நடனத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளதாம். முன்னணி நடிகர்களின் வீடியோக்களை விட இந்த நடிகையின் நடன வீடியோக்கள் பல மில்லியன் பார்வையாளர்களை குவித்து வருகிறதாம்.

இந்நிலையில் சமீபகாலமாக அந்த நடிகையின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருவதாக பிரதேச இயக்குனர்கள் புலம்பி வருகின்றனர். முதலில் இயக்குனர்கள் சொல்வதை கேட்டு நடித்து வந்த நடிகை தற்போது இயக்குனர்களுக்கே கட்டளை போடும் அளவுக்கு வந்து விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இயக்குனர்களுக்கு ஆர்டர் போட்டு அவஸ்தைப்பட வைக்கிறாராம். பார்க்க சமர்த்துப் பிள்ளையாக இருந்து கொண்டு இவ்வளவு வேலைகளை பார்க்கிறாரா என ஆச்சரியத்தில் உள்ளதாம் அக்கட தேசம். எந்த நடிகருடன் எவ்வளவு தூரம் நெருக்கமாக நடிக்க வேண்டும், எந்த நடிகரை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்கிறார்.

தமிழில் இந்த நடிகை நடித்த சில படங்கள் படு தோல்வியை சந்தித்ததால் தற்போதைக்கு தமிழ் தமக்கு ராசியில்லை என அக்கட தேசத்திலேயே டேரா போட்டுவிட்டார். இந்த நடிகையின் இந்த குணத்தால் விரைவில் சினிமா பட வாய்ப்புகளை இழந்து விடுவார் பாருங்கள் இருக்கிறதாம் அக்கட வட்டாரம்.

Trending News