துரு துரு கண்களும், குழந்தை போன்ற சிரிப்பும் என முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் தான் இந்த நடிகை. முதல் படம் தாறுமாறு ஹிட் அடித்ததால் அதை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளும் இவரை தேடி வந்தது. இப்படியே முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த நடிகை திடீரென ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டார்.
மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகைக்கு இருந்த காதல் தோல்வியும் வெட்ட வெளிச்சமானது. ஆனால் இந்த விஷயம் மீடியாவில் பத்தோடு பதினொன்றாக முடிந்து போனது. ஏனென்றால் இந்த மரணத்திற்கு பின்னால் பல எதிர்பாராத விஷயங்கள் இருந்தது.
Also read: சூப்பர்ஸ்டாரை நம்பி மோசம் போன பிரபல நடிகை.. குடிக்கு அடிமையாகி வாழ்க்கையை வெறுத்த சம்பவம்
அதாவது பிரபல குடும்பத்து வாரிசை தான் நடிகை உருகி உருகி காதலித்தார். இந்த காதல் அந்த வாரிசின் குடும்பத்திற்கு பிடிக்காத காரணத்தால் நடிகை ஏகப்பட்ட மிரட்டல்களையும் சந்தித்தார். அதை தொடர்ந்து இந்த காதல் பிரேக்கப்பில் முடிந்திருக்கிறது. அந்த காதலனும் நடிகையை விட்டு பிரிந்தார்.
இதற்குப் பின்னால் பிரபல நடிகை ஒருவரின் மிரட்டலும் இருந்தது தான் ஆச்சரியம். இப்படி காதல் தோல்வி, நம்பிக்கை துரோகம் போன்ற காரணங்களால் தான் நடிகை தன் உயிரை மாய்த்துக் கொண்டார். நடிகைக்கு நடந்த இந்த விஷயம் சில நாட்கள் சலசலக்கப்பட்டு அதன் பிறகு அப்படியே ஓய்ந்து போனது.
Also read: நம்பியவர்களால் நடந்த நம்பிக்கை துரோகம்.. மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்ற நடிகை
ஆனால் 21 வருடங்கள் கடந்த நிலையில் நடிகையின் மரணத்திற்கு காரணமானவர்களில் ஒருவராக இருந்த நடிகை தற்போது இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு கதறி இருக்கிறார். ஒட்டு மொத்தமாக நடிப்பிலிருந்து விலகிய அந்த நடிகை தற்போது தன்னுடைய செயல்களுக்காக மனம் உருகி மன்னிப்பு கேட்டிருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால் காலம் கடந்து கேட்ட இந்த மன்னிப்பு போன உயிரை திரும்பவா கொண்டு வர போகுது.