புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

டாப் ஹீரோவின் வாழ்க்கையில் விளையாடிய அம்மா நடிகை.. மகள் தலையில் இடி போல் விழுந்த கர்மா

டாப் ஹீரோவாக புகழ் பெற்றுக் கொண்டிருந்த நடிகர் திடீரென எங்கு போனார் என்று தெரியாத அளவுக்கு வாய்ப்புகள் இழந்து காணப்பட்டார். இத்தனைக்கும் அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்துமே பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாகும். அதிலும் ஏராளமான பெண் ரசிகைகள் அவருக்கு உண்டு.

அப்படிப்பட்ட நடிகரை திரையுலகம் ஒதுக்கியதற்கு பின்னால் ஒரு நடிகை இருக்கிறார் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. ஆனால் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் இந்த நடிகருடன் இணைந்து சில படங்களில் நடித்திருக்கிறார். அப்போது அவருடைய வசீகர சிரிப்பு, ஸ்டைல் என அனைத்தையும் பார்த்து மயங்கிய நடிகை அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இருக்கிறார்.

Also read: போதையில் அரைகுறை ஆடையில் பார்க்கிங்கில் கிடந்த தொகுப்பாளினி.. மானத்தைக் காப்பாற்ற தெறித்து ஓடிய ஹீரோ

இதை நடிகரிடமும் அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் நடிகருக்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாது. இதனால் நடிகையின் காதலை அவர் மறுத்திருக்கிறார். அந்த கோபத்தில் அந்த ஹீரோயின் நடிகருக்கு பலான நோய் இருப்பதாக கதை கட்டி அவருடைய வாழ்க்கையையே திருப்பி போட்டார். இதனால் நடிகரின் திரை வாழ்வே கேள்விக்குறியாக மாறியது.

அதன் பின் சில மாதங்களிலேயே ஒரு பெரிய இயக்குனரை திருமணம் செய்து கொண்ட நடிகை அதன் பிறகு குழந்தை, குட்டி என செட்டிலானார். தற்போது அவருடைய பிள்ளைகளும் திரையுலகில் அனைவருக்கும் பரிச்சயமானவர்களாக இருக்கிறார்கள். இருப்பினும் நடிகையின் வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் இருக்கிறது.

Also read: பெரிய டைரக்டருடன் அந்தரங்க உறவில் இருந்த நடிகை.. அனைத்தையும் பார்த்துவிட்ட உதவி இயக்குனர்

காரணம் அவருடைய மகள் 40 வயதை நெருங்கும் நிலையிலும் காதல் தோல்வியால் முதிர் கன்னியாக திருமணமே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார். எந்த காதல் தனக்கு கிடைக்கவில்லை என்று அந்த நடிகை ஒருவரின் வாழ்க்கையில் விளையாடினாரோ அந்த காதலே மகளை தனி மரமாக நிற்க வைத்து விட்டது. இதை தான் கர்மா என்று சொல்வார்கள். தற்போது மகள் இப்படி இருப்பதை பார்த்து நடிகை பெரும் வேதனையில் இருக்கிறாராம்.

Trending News