ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

பணத்துக்காக நடிகைகளை மோசம் பண்றாங்க.. ஓபன் ஆக சொன்ன பரத் பட நடிகை

2013ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான 555 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் எரிக்கா பெர்னாண்டஸ். அதனைத் தொடர்ந்து விரட்டு, விழித்திரு போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆனால் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என நடித்தாலும் சினிமாவை பொறுத்தவரையில் இவருக்கு வரவேற்பு இல்லை என்பதே உண்மை.

இதைப் புரிந்துகொண்டு சீரியலில் தடம் பதித்தார். தற்போது ஹிந்தியில் டாப் சீரியல் ஹீரோயினாக வலம் வருகிறார். கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் இவரது சீரியல் ரேட்டிங் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவரை வெப் சீரிஸில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் அவர் கேட்டதைவிட அளவுக்கு அதிகமாக சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த எரிகா வெப்சீரிஸ் கதை எந்த மாதிரி இருக்கும் என கேட்டுள்ளார். போல்ட் கண்டன்ட் என கூறியுள்ளனர். அப்படி என்றால் நடிகைகளை அந்த மாதிரி காட்சிகளுக்கு அதிகம் பயன்படுத்துவார்கள் என்று பொருள்.

இதைப் புரிந்துகொண்ட அந்த நடிகை மிகவும் மனவேதனையுடன் சமீபத்திய பேட்டி ஒன்றில், பணம் கொடுத்தால் நடிகைகள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், கதைக்கு தேவையே இல்லாத இடங்களில் வேண்டுமென்றே வியாபாரத்திற்காக அந்த மாதிரி காட்சிகளை புகுத்தி விடுகின்றனர் என வருத்தப்பட்டது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

Erica Fernandes-cinemapettai
Erica Fernandes-cinemapettai

Trending News