முன்னாள் காதலருடன் நடிக்க கேட்ட இயக்குனர்.. உதட்டு முத்தக்காட்சிக்கு பயந்து விலகிய நடிகை

tamil-actress-2 (1)
tamil-actress-2 (1)

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருக்கும் அந்த நடிகர் சமீபகாலமாக இதுவரை இல்லாத அளவுக்கு படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அந்த நடிகருடன் நடிக்க முன்னாள் காதலி பயந்து கொண்டிருக்கும் செய்துதான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே அந்த இளம் நடிகருடன் காதலில் விழுந்தவர் தான் அந்த முன்னணி நடிகை. சும்மா சொல்லக்கூடாது, அந்த நடிகர் அப்போது பார்ப்பதற்கு செம ஹாட் பாயாக இருந்தார். அவரைப் பார்த்தால் யாருக்குமே பிடித்து விடும்.

அப்படிப்பட்ட ஒரு ஆள் மீது அந்த நடிகை காதலில் விழுந்தது ஒன்றும் புதிதல்ல. இருவரின் காதலும் ஒரு படத்தின் படுக்கை அறை காட்சியின் மூலம் எவ்வளவு அழுத்தமானது என்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு அந்த நடிகையும் இளம் நடிகரும் வேறுவேறு காதலில் விழுந்தனர். ஆனால் தற்போது வரை நடிகருக்கு எதுவுமே கைகூடி வரவில்லை. இந்நிலையில் அந்த நடிகர் அறிமுகப்படுத்திய இளம் இயக்குனரை தான் தற்போது அந்த நடிகை காதலித்து வருகிறார். அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.

ஆனால் தற்போது அந்த இளம் நடிகர் லக்கி ஸ்டைலிஷ் இயக்குனரின் புதிய காதல் படத்தை விரைவில் இயக்க உள்ளாராம். அதற்காக அந்த நடிகரின் முன்னாள் காதலியான அந்த முன்னணி நடிகையை கேட்டுள்ளார். அந்த தயாரிப்பாளரும் முன்னணி நடிகை மீது நம்பிக்கை வைத்து கேட்டதால் தற்போது ஓகே சொல்லலாமா? வேண்டாமா? என யோசித்து வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் அந்த இயக்குனர் படம் என்றால் கண்டிப்பாக உதட்டு முத்தக் காட்சிகள் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது எனக் கருதி தற்போது அந்த படத்தில் இருந்து விலகுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறாராம் நடிகை.

Advertisement Amazon Prime Banner