தமிழ் சினிமாவில் சில நடிகர், நடிகைகள் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். அந்த நடிகர், நடிகைகளுக்கு அவர்கள் பயணம் முழுவதும் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள். பல ஆண்டுகளாக ஒரு சில நடிகைகளின் தீவிர ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகையை கோவில் கட்டி வருகின்றனர். அந்த வகையில், தென்னிந்தியா ஐந்து நடிகைகளுக்கு தீவிர ரசிகர்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது.
குஷ்பூ சுந்தர்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை குஷ்பூ. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒல்லியான ஹீரோயின் மட்டுமே பிடிக்கும் என்ற ட்ரெண்டை மாற்றியவர் குஷ்பூ. குஷ்பு கோலிவுட்டில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். குஷ்புக்கு திருச்சி அருகே கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினர். ஒரு நடிகைக்கு கோவில் கட்டிய செய்தி நாடு முழுவதும் தீயாக பரவியது.
ஹன்சிகா மோத்வானி: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். சின்ன குஷ்பூ என்று அழைக்கப்பட்ட ஹன்சிகா மோத்வானிக்கு திருச்சி அருகே கோவில் கட்ட ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் ஹன்சிகா தனக்கு கோவில் கட்ட வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் ரசிகர்கள் அந்த முடிவை கைவிட்டனர்.
நமிதா: நடிகை நமிதாவுக்கு அறிமுகம் தேவையில்லை. ஒரு காலத்தில் கவர்ச்சி காட்டி அனைவரையும் ஈர்த்தவர். இவர் பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் நமிதா பங்கு பெற்றார். அதன் பின்பு திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். குஷ்புக்கு பிறகு கவர்ச்சி நடிகை நமிதாவிற்கு நெல்லை அருகே அவரது ரசிகர்கள் கோவில் கட்டினார்கள்.
நயன்தாரா: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகை நயன்தாராவுக்கு அவருடைய ரசிகர்கள் கோயில் கட்டினார்கள். அண்மையில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார்.
நிதி அகர்வால்: ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தார் நிதி அகர்வால். இந்த இரண்டு படங்களுமே சென்ற ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. இந்நிலையில் சென்ற ஆண்டு சென்னையில் நிதி அகர்வாலுக்கு அவரது ரசிகர்கள் கோவில் கட்டி அவரின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.