
Gossip : சினிமாவில் உச்சத்தில் இருந்த போது வாரிசு நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென புயல் காற்று வீசியது.
அதாவது திருமணத்திற்கு பிறகும் நடிகை படங்களில் நடித்து வந்த நிலையில் தன்னுடைய நடிப்பு தீனிக்கு குழந்தை தடையாக இருக்குமோ என்று தள்ளி போய்க்கொண்டு வந்தார். இதனால் நடிகரின் குடும்பம் பிரச்சினை செய்துள்ளது.
இது முற்றிப்போக விவாகரத்து வரை சென்று விட்டது. அதன் பிறகு இப்போது நடிகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பிரம்மாண்டமாக திருமணமும் முடிந்து விட்டது. இந்நிலையில் நடிகை விவாகரத்திற்கு முன்பு கணவருடன் சேர்ந்து ஒரு பங்களா வாங்கி இருக்கிறார்.
முன்னாள் கணவர் மீது வழக்கு போட்ட நடிகை
அதில் தான் இப்போது நடிகையின் முன்னாள் கணவர் தனது புதிய மனைவியுடன் குடியேற சென்றிருக்கிறார். ஆனால் அந்த பங்களா தானும் சம்பாதித்தது என்று நடிகை இப்போது பிரச்சனை செய்து வருகிறார்.
மேலும் அந்த பங்களா தன்னை சேர வேண்டும் என்று இப்போது கோர்ட்டுக்கு போயிருக்கிறார் நடிகை. விவாகரத்திற்கு பிறகு நடிகை தனக்கு ஜீவான்சம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அப்படிப்பட்ட நடிகை இப்போது தான் சம்பாதித்த சொத்து என்பதால் தான் வழக்கு போட்டிருக்கிறார். ஆகையால் நடிகை பக்கம் தான் தீர்ப்பு வரும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.