வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சுந்தர் சியால் மொத்தமாய் முடிந்து போன சினிமா கேரியர்.. இன்று வரை ஏன் நடித்தோம் என்று புலம்பும் நடிகை

Sundar C : சுந்தர் சி இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கி உள்ளார். இப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகிறது. இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

இந்நிலையில் சுந்தர் சியின் படத்தில் நிறைய கதாநாயகிகள் அறிமுகம் ஆகியது உண்டு. அவர் படத்தில் நடித்ததால் கேரியர் சுத்தமாக போய்விட்டது என நடிகை ஒருவர் கொடுத்த பேட்டி தான் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

புலம்பித் தள்ளிய கிரண்

அதாவது தற்போது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் தான் நடிகை கிரண் ராத்தோட். விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் கிரண்.

தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறையவே பாலிவுட் பக்கம் சென்று இருந்தார். அங்கு அவருக்கு வரவேற்பு கிடைக்காததால் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்து விட்டார். அப்போது தான் சுந்தர் சி-யின் ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கேரக்டர் ரோல் கொடுக்கிறார் என்று சொல்லி ஏதோ உப்புக்கு சப்பானி ரோல் கொடுத்து விட்டார். சுந்தர் சி நிஜத்தில் எனக்கு அண்ணன் மாதிரி தான். ஆனால் ஆம்பள படத்தில் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தை கொடுத்தார் என்று தெரியவில்லை.

அதன் பின்பு தனது சினிமா கேரியர் மொத்தமாக போய்விட்டது என நடிகை கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் புலம்பி இருக்கிறார். இப்போது அவருக்கு பட வாய்ப்புகளை சுத்தமாக வருவது இல்லையாம்.

Trending News