Gossip: பாடகி, நடிகை என பன்முகத்தன்மை கொண்ட ஒருவர் தெரிந்தே அதல பாதாளத்தில் விழுந்ததை பற்றி கூறியிருந்தார். அதாவது நல்ல திறமையான நடிகை துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் இவர் மிகவும் தைரியமான ஆள் தான். ஏற்கனவே ஒரு இசையமைப்பாளருடன் இவர் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது திருமணமான ஒரு நபருடன் நடிகை தவறான உறவு வைத்திருந்ததாக கூறியிருக்கிறார். இதனால் மனதாலும், உடலாலும் நிறைய காயப்பட்டு இருக்கிறாராம். இந்த செயலால் தனது வாழ்க்கையை இருண்டு போய்விட்டது என்றும் கூறியிருக்கிறார்.
தெரிந்தே தவறான உறவிலிருந்து நடிகை
இந்த சம்பவத்திலிருந்து மீள முடியாத நிலையில் சினிமாவை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்துள்ளார். அதோடு தனக்கு ஏற்பட்ட பிரச்சனையால் சிகிச்சையும் எடுத்துள்ளார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியே வந்துள்ளார்.
இப்போது மீண்டும் படங்களில் நடித்து வரும் நடிகை தனது வாழ்க்கையில் இது போன்ற கசப்பான அனுபவத்தை மீண்டும் சந்திக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். மேலும் பலர் தப்பான அணுகு முறையில் நடந்து கொண்டதாகவும் நடிகை கூறியிருக்கிறார்.
ஆனால் தான் செய்த தவறுக்கு சரியான தண்டனையை அனுபவித்து விட்டதாக வெளிப்படையாகவே அந்த பேட்டியில் நடிகை கூறி இருக்கிறார். மேலும் இப்போது பழைய சுறுசுறுப்புடன் படங்களில் நடித்து வருகிறார்.