புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நடிகைகளை மிஞ்சும் 34 வயது வாரிசு நடிகை.. பணத்தை வாரியிறைக்கும் தயாரிப்பாளர்கள்

கவர்ச்சிக்கு பேர்போன அக்கட தேசத்தில் கவர்ச்சி காட்டிய பெரியாளானவர் தான் அந்த வாரிசு நடிகை. நம்ம ஊரு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மகள் தான் அவர். சமீபத்தில்கூட நாயகி நடிப்பில் வெளியான கமர்சியல் படம் ஒன்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. கவர்ச்சியை மட்டுமே நம்பி தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவருக்கு எல்லாமே கைகொடுத்தது.

வடக்கில் இருந்து தெற்கு வரை அம்மணியின் ஆட்சிதான். தமிழில் முன்னணி நடிகர்களுடன் சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் எடுபடவில்லை. ஆனால் அக்கட தேசத்தில் இன்னமும் அம்மணியின் கொடி உயர உயரப் பறந்து கொண்டே இருக்கிறதாம். வடக்கே சொல்லவே வேண்டாம். நீச்சல் உடை முதல் நடிகருடன் படுக்கையறை காட்சி வரை நடித்து மிரள வைக்கிறார்.

நன்றாக சென்று கொண்டிருந்த தன்னுடைய கேரியருக்கு நடுவே காதல் வலையில் விழுந்தார் அந்த நாயகி. வெளிநாட்டு காதலர் கொஞ்ச நாள் இருந்து விட்டு வேலையை காட்டி விட்டார். அம்மணிக்கு கல்தா கொடுத்து விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையில் அப்பாவும் மகளும் சேர்ந்து கொண்டு அந்த வெளிநாட்டு காதலருக்கு வேட்டி கட்டி விடுவது என்ன, தமிழர் பண்பாடு பற்றி சொல்லிக் கொடுப்பது என்ன, அடடடடா.

மொத்தத்துக்கும் நாமம் போட்டு விட்டு கிளம்பிவிட்டார் அந்த வெளிநாட்டு காதலர். அந்த காதல் ஏமாற்றத்தை அந்த நாயகியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையாம். ஒரு கட்டத்தில் படங்களில் நடிப்பதை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு வருடக்கணக்கில் தனிமையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நேரமோ என்னமோ, ரீ என்ட்ரி கொடுத்த முதல் படமே அக்கட தேசத்தில் வசூலை வாரிக் கொட்டுகிறதாம். அதிலும் அம்மணி நடிகருடன் ரொமான்டிக், கவர்ச்சி என கிளாமரில் பின்னி பெடல் எடுத்து விட்டாராம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மணியை இப்படி பார்த்ததில் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சந்தோசம். இதனால் அக்கட தேசத்தில் அம்மணிக்கு மீண்டும் படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர்களும் அம்மணி திரும்ப வந்ததை நினைத்து மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். மேற்கொண்டு பட வாய்ப்புகளையும் கொட்டிக் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Trending News