ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகைகள் எல்லாம் இப்போது ரீ என்ட்ரியில் பட்டையை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த அமுல் பேபி நடிகை ஒருவர் 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்திருந்த திரைப்படம் வசூலை வாரி குவித்தது.
தற்போது 42 வயது ஆகும் அந்த நடிகை இளமை காலத்தில் எப்படி இருந்தாரோ அதற்கும் மேலாக அவர் இப்போது பயங்கர அழகாக இருக்கிறார். அதனாலேயே அவரை தேடி பல வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது. மறுபிரவேசத்தில் இப்படி ஒரு வரவேற்பை எதிர்பார்க்காத அந்த நடிகை தற்போது அடுத்தடுத்த வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார்.
Also read: போதைப் பழக்கத்தால் டாப் ஹீரோவின் பெயரை கெடுத்த மகன்.. ஹீரோவாக படம் எடுக்க தயங்கும் தயாரிப்பாளர்கள்
திருமணத்திற்கு பிறகு குடும்பம், குழந்தைகள் என்று சினிமாவை ஒட்டுமொத்தமாக மறந்து போயிருந்த நடிகைக்கு தற்போது மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டு இருக்கிறது. அதற்காக அவர் படுக்கையறை காட்சியில் நடிப்பதற்கு கூட சம்மதம் தெரிவித்து விட்டாராம். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த வெப் சீரிஸ் பலருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது.
குழந்தை போல் கொஞ்சி கொஞ்சி பேசும் அந்த நடிகையை அப்படி ஒரு கேரக்டரில் எதிர்பார்க்காத ரசிகர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லையாம். ஆனால் நடிகையோ இது பற்றி கேட்டால் நடிப்பில் இதெல்லாம் சகஜம் என்று மிகவும் கூலாக கூறுகிறாராம். அது மட்டுமல்லாமல் இது போன்ற சவாலான கேரக்டரில் நடிக்கவும் அவர் ஆர்வம் காட்டி வருகிறாராம்.
அதனாலேயே இப்போது அவர் வீட்டு வாசலில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி நிற்க்கிறார்களாம். விரைவில் அம்மணியின் அடுத்தடுத்த பட அறிவிப்புகள் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் வெப் தொடர்களுக்கு தான் அவர் அதிக முன்னுரிமை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also read: அவ இல்லனா செத்துடுவன், நடிகையின் மயக்கத்திலிருந்த வாரிசு நடிகர்.. திட்டம் போட்டு வெட்டி விட்ட அப்பா