90களில் இளம் ரசிகர்களின் மோகத்தை பந்தாடிய நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் ஹீரா. தன்னுடைய கிளாமர் தோற்றத்தாலும் வசீகரத்தால் அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போட்டவர். ரசிகர்களை மட்டுமல்ல. சில நடிகர்களையும் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
முரளி நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான இதயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஹீரா ராஜகோபால். அதன் பிறகு ஹீராவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். மள மள மளவென தமிழ் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக அப்போது முன்னணியில் இருந்த சரத்குமார் மீது காதல் வயப்பட்டார். அதன் பிறகு நீண்ட நாட்கள் இருவரும் காதலித்து வந்தனர். சரத்குமார் ஹீராவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பொண்ணு கேட்டு சென்றதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால் அதன்பிறகு இருவரின் காதலுக்கு என்னாச்சு என்பது தெரியவில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை தவிர்த்து வந்தனர். பின்னர் சரத்குமார் மற்றும் ஹீரா இருவருமே தங்களுடைய சினிமா கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் அந்த காதல் கதை ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
ஆனால் அதன் பிறகு தொடரும் படத்தில் நடித்தபோது அஜித்துக்கும் ஹீராவுக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகி காதலாக மாறியது. தொடரும் படத்தில் நடித்தபோது ஹீராவுக்கு அஜித் லவ் லெட்டர் எழுதியதெல்லாம் தனிக்கதை.
இருவரும் தங்களது காதலை படங்களில் நெருக்கமான காட்சிகளில் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்தினர். ஆனால் அதன் பிறகு அஜித் மற்றும் ஹீரா குடும்பத்தினருக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் உள்ளன. ஆனால் பிரிந்த காரணம் தற்போது வரை புரியாத புதிராக உள்ளது.
இந்த இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு நடிகை ஹீரா திருமணமே செய்து கொள்ளாமல் தற்போது வரை வாழ்ந்து வருகிறார். ஆனால் அஜித் மற்றும் சரத்குமார் இருவரும் வேறு நடிகைகளை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.