ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

டிரான்ஸ்பரென்ட் உடையில் வந்த நடிகை.. எம்ஜிஆர் செய்த காரியம்

அந்த காலத்தில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி படங்களை தான் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்த்தனர். மேலும் எம்ஜிஆர் உடன் அதிக முறை ஜோடி போட்டு நடித்த நடிகைகளுடன் அவர் கிசுகிசுக்கப்படுவார். மேலும் எம்ஜிஆர் பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். ஆனால் உதவி என்று கேட்பவர்களிடம் தன்னால் முடிந்த உதவிகளை செய்யக்கூடியவர்.

இந்நிலையில் எம்ஜிஆர் செய்த காரியத்தை பற்றி ஒரு பேட்டியில் நடிகை ஒருவர் கூறியுள்ளார். அதாவது எம்ஜிஆர் படப்பிடிப்பில் இருந்தால் இயக்குனர்கள் முதல் தயாரிப்பாளர்கள் நின்று கொண்டு தான் இருப்பார்கள். அவ்வாறு எம்ஜிஆருக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏகபோக மரியாதை இருக்கும்.

Also read: எம்ஜிஆருக்கு நிகராக சம்பளம் வாங்கிய வில்லன்.. சிரிப்பாலேயே மிரளவிட்ட மாபெரும் கலைஞன்

பணம் படைத்தவன் என்ற படத்தில் கண் போன போக்கிலே என்ற பாடல் பலருக்கும் ஞாபகம் இருக்கும். இந்தப் பாடலில் ஆடுவதற்காக சௌகார் ஜானகி வந்துள்ளார். அப்போது காஸ்ட்யூம் டிசைனர் சௌகார் ஜானகிக்கு உடல் தெரிகிற மாதிரி டிரான்ஸ்பரென்ட் உடைய கொடுத்துள்ளார். அப்போது எம்ஜிஆர் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டாராம்.

அதாவது இந்த உடை கண்ணாடி போல் இருக்கிறது, உங்களுக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது வேறு உடையை மாற்ற சொல்லுங்கள் என சௌகார் ஜானகி இடம் கூறியுள்ளார். பிறகு அவர் வேறு உடை அணிந்து வந்த பிறகு தான் அந்தப் பாடல் படமாக்கப்பட்டதாம். இதை மிகவும் பெருமையாக சௌகார் ஜானகி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Also read: எம்ஜிஆர், விஜயகாந்த் போல வர முடியாத ரஜினி.. வேற வழியில்லாமல் கையில் எடுத்த ஆயுதம்

அதாவது எம்ஜிஆர் உடன் நிறைய நடிகைகள் நடித்து உள்ளார்கள். மேலும் அதில் கவர்ச்சி உடை அணிந்தும் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய பெயர் களங்கம் வரக்கூடாது என்பதற்காக எம்ஜிஆர் அவ்வாறு சொன்னது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்ததாக சௌகார் ஜானகி பேசி இருந்தார்.

மேலும் 70 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் தனது பங்களிப்பை கொடுத்த சௌகார் ஜானகி தற்போது உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். அவரைப்போல ஒரு நடிகை இனி தமிழ் சினிமாவில் பிறந்து தான் வரவேண்டும். ஏனென்றால் தனக்கான முத்திரையை ஆழமாக பதித்துள்ளார்.

Also read: தமிழ் சினிமாவில் அதிக வெள்ளி விழா கொடுத்த 3 நடிகர்கள்.. எம்ஜிஆரை பின்னுக்கு தள்ளிய மும்மூர்த்திகள்

Trending News