வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சினிமால பத்தாதுன்னு சைடு பிசினஸில் கல்லா கட்டும் 6 நடிகைகள்.. என்னென்ன தொழில் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் லட்சத்தில் இருந்து கோடிகள் வரை சம்பளமாக வாங்கும் நடிகைகள் அதைத் தாண்டியும் பிற்கால சேமிப்பிற்காக சில தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவைத் தாண்டி பிஸ்னஸ் நடத்தி வரும் நடிகைகளை பார்க்கலாம்.

நயன்தாரா: தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உள்ளவர் நயன்தாரா. பல படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். நயன்தாரா மற்றும் இவரது காதலன் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இதுதவிர நயன்தாரா சாய் வாலா என்கிற டீ கம்பெனியில் பார்ட்னராக உள்ளார். அண்மையில் தி லிப் பாம் என்ற அழகு சாதன கம்பெனியை தொடங்கினார்.

பூர்ணிமா பாக்யராஜ்: ஒரு காலக் கட்டத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூர்ணிமா. இவர் இயக்குனரும் நடிகருமான கே பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார். பூர்ணிமா பாக்யராஜ் பல வருடங்களாக பெண்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்வது, மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா பாதிப்பால் எல்லோரும் மாஸ்க் அணிவது கட்டாயமான நிலையில், பல்வேறு டிசைன் மாஸ்களைக் தயாரித்து வருகிறார்.

சமந்தா: தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர் நடிகை சமந்தா. இவர் ஃபேஷன் மீதான காதலை வணிகப் படுத்தலாம் என்பதனால் ஆன்லைன் மூலம் ஆடைகளை விற்று வருகிறார். சமந்தா தனது ஃபேஷன் லேபிள் ஃபேஷனை மலிவு மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளதாக கூறியிருந்தார்.

தமன்னா: நேர்த்தியான நகைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் நடிகை தமன்னா. இவர் நகைகளை வடிவமைத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றார். தமன்னா அவருடைய தந்தை சந்தோஷ் பாட்டியாவுடன் இணைந்து இந்த தொழிலை நடத்தி வருகிறார்.

ஹன்சிகா: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த இவர் தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் திருமணம் உள்ளிட்ட வீட்டு நிகழ்ச்சிகளுக்கு பலூன்களைக் கொண்டு விதவிதமான அலங்காரம் செய்யும் வேலை.

திரிஷா: தமிழ் சினிமாவில் இன்று வரை பல ரசிகர்களின் கனவு கன்னியாக உள்ளவர் நடிகை திரிஷா. பல படங்களை கைவசம் வைத்துள்ள திரிஷா ரியல் எஸ்டேட் பிசினஸ் நடத்தி வருகிறார். இதனால் பல இடங்களில் நிலம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

Trending News