சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

100 நாட்களுக்கு மேல் ஓடிய ஜோதிகாவின் திரைப்படங்கள்.

ஜோதிகா  அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து பெரும் வெற்றியைப் பெற்றார். ஒரு காலத்தில் சிம்புவுக்கு போட்டியாக நடித்து பெயர் பெற்ற நடிகையாக இருந்தவர் ஜோதிகா. இன்று வரை சற்று இடைவெளிவிட்டு நடித்து வருகிறார்.

ஜோதிகாவின் ஹிட் திரைப்படங்கள்

#1. குஷி

kushi
kushi

விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார்.இப்படத்தை இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா இயக்கியுள்ளார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

#2. தெனாலி

thenali
thenali

கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தெனாலி. இப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தேவயானி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படமும் ஜோதிகாவிற்கு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.

#3. பூவெல்லாம் உன் வாசம்

ajith-jothika
ajith-jothika

அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் பூவெல்லாம் உன் வாசம். இப்படத்தை எழில் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.  ஜோதிகாவிற்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

#4. காக்க காக்க

surya-jothika
surya-jothika

சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் காக்க காக்க. இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சூர்யாவும் ஜோதிகாவும் படத்தில் இணைந்து நடித்து ஜோதிகாவிற்கு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.

#5. பேரழகன்

surya joythika
surya joythika

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் பேரழகன். இப்படத்தை சசி சங்கர் இயக்கியுள்ளார். விவேக், மனோரமா மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

#7. ஜில்லுனு ஒரு காதல்

surya-jyothika
surya-jyothika

சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல்.  இப்படத்தை என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யா ஜோதிகா கணவன் மனைவியாக நடித்து இருப்பார்கள்.

#8. மன்மதன்

simbu-jyothika
simbu-jyothika

சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மன்மதன். இப்படத்தை  ஏ ஜே முருகன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.  

#9. சந்திரமுகி

joythika-rajini
joythika-rajini

ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தை பி வாசு இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். நாசர், வடிவேலு, ஜோதிகா, பிரபு, நயன்தாரா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

#10. வேட்டையாடு விளையாடு

jyothika-kamal
jyothika-kamal

கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படமும் ஜோதிகாவிற்கு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.

#11. தூள்

thool
thool

விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தூள். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விவேக், ஜோதிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

#12. பச்சைக்கிளி முத்துச்சரம்

jyothika-sarathkumar
jyothika-sarathkumar

சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் பச்சைக்கிளி முத்துச்சரம். இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜோதிகா, சரத்குமார் நடித்துள்ளனர்.

Trending News