புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மொத்தமா டேமேஜ் ஆன ஜோதிகா.. இதுக்கு நயன்தாராவே பரவால்ல போலயே!

Actress Jyothika: கங்கா சந்திரமுகி அறைக்கு போனா, சந்திரமுகியா நின்னா, அப்படின்னு சூப்பர் ஸ்டார் சந்திரமுகி படத்துல ஒரு டயலாக் சொல்லியிருப்பார். அது இப்போ ஜோதிகாவுக்குன்னே எழுதுன வசனம் போல் ஆகிவிட்டது. ஒரு பக்கம் அவரை ரொம்ப விரும்பும் ரசிகர்கள் உங்களுக்கு ஏன் இந்த வேலைன்னு பொலம்பிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் சூர்யா ரசிகர்கள் கதறிட்டு இருக்காங்க.

ஜோதிகா நம்ம சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த காலத்தில் ரொம்ப துறு துறுவென்று இருக்கும் பெண்ணாக ரசிக்கப்பட்டார். அதே நேரத்தில் அய்யோ, இந்த பொண்ணு ஓவர் ஆக்ட்டிங் பா என்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து இருக்கிறது. சூர்யா உடன் ஆன திருமணத்திற்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு தன்னை மாற்றி கொண்டார்.

36 வயதினிலே, மகளிர் மட்டும், ராட்சசி, பொன்மகள் வந்தால் என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறைய படங்களில் நடித்தார். அது மட்டும் இல்லாமல் சூர்யா தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக ஜோதிகாவை மாற்றிய பிறகு சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.

இதற்கிடையில் ஜோதிகா, தளபதி விஜய் உடன் இணைந்து GOAT படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் கடைசியில் அந்த கேரக்டரில் சினேகா ஒப்பந்தமானார். இந்த படத்தின் பேச்சு வார்த்தைக்கு முன்பாகவே ஜோதிகா குடும்பத்துடன் மும்பைக்கு குடி பெயர்ந்தார்.

மலையாள நடிகர் மம்முட்டியுடன் காதல் தி கோர் என்னும் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து பாலிவுட்டில் அஜய் தேவ்கான் மற்றும் மாதவனுடன் இணைந்து சைத்தான் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

சைத்தான் படத்தின் பிரமோஷன் விழாவில் ஜோதிகா சூர்யாவுடன் கலந்து கொண்டார். அதில் அவர் அணிந்திருந்த உடை பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அடிக்கடி படு மாடனாக ஆடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

விமர்சனத்திற்குள்ளான ஜோதிகா

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த விஷயம் கொஞ்சம் வருத்தத்தை அளித்திருக்கிறது. என்ன நம்ம ஜோதிகா இந்தி படத்திற்காக இப்படி மாறிட்டாங்க என எல்லோரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஜோதிகாவின் வொர்க் அவுட் வீடியோக்களும் நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.

நடிகை நயன்தாரா பாலிவுட் சினிமாவுக்கு போயிருந்தாலும் இங்கு எப்படி இருந்தாரோ அப்படித்தான் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்த விருது விழாவிற்கு கூட அவர் புடவையில் சென்று இருந்தார். ஆனால் ஜோதிகா இப்படி மொத்தமாக மாறி இருக்கிறார். இதற்கு நயன்தாரா எவ்வளவோ பரவாயில்லை என பேசி வருகிறார்கள்.

Trending News