Jyothika: நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படத்தில் கம்பேக் கொடுத்த ஜோதிகா தொடர்ந்து சோலோ ஹீரோயினாக அசத்தி வந்தார்.
ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா போர் அடித்து விட பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கினார். பாலிவுட் சினிமா உலகமும் ஜோதிகாவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று இருக்கிறது.
பாலிவுட்டில் நிலையாய் இருக்க வேண்டும் என்றால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ரொம்பவே முக்கியம்.
47 வயதிலும் கொள்ளை அழகு
இதனால் ஜோதிகா பிட்னஸில் ரொம்பவும் கவனம் செலுத்துகிறார். உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார்.
இவருடைய நடிப்பில் டப்பா கார்டெல் என்னும் வலைத்தொடர் பிப்ரவரி 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு ஜோதிகா படு மார்டனாக வந்திருந்தார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
47 வயதிலும் ஜோதிகா முப்பது வயது பெண் போல் இளமையுடன் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆள் அடையாளமே மாறி மொத்தமாக பாலிவுட் நடிகை போல் இருக்கிறார் ஜோதிகா.



