Actress Jyothika is re-enters bollywood for a long time along with Madhavan: தமிழில் வாலி படத்தின் மூலம் “வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா! ஓ சோனா! சோனா!” என்று தமிழ் ரசிகர்களை துடிக்க வைத்த அழகு பதுமை ஜோதிகா திரை துறையில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து குஷி, டும் டும் டும், காக்க காக்க, சந்திரமுகி என அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
சூர்யாவுடனான திருமணத்திற்கு பின் திரை துறையில் இருந்து கொஞ்சம் விலகி இருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து நாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ராட்சசி, காற்றின் மொழி போன்ற படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் ஜோதிகா.
ஜோதிகா அவர்கள் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் முன்னணி கதாநாயகர்கள் படம் என்றால் கூட மறுத்து விடுகிறாராம். உதாரணமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கிடைத்த வாய்ப்பை மறுத்துள்ளார் ஜோதிகா. இதற்குப் பின்பே இந்த வாய்ப்பு சினேகாவிற்கு சென்றது.
Also read: சூதாட்டத்தில் இறங்கிய சூர்யா.. ஜோதிகா மீது கடுப்பில் இருக்கும் சிவக்குமார்
தமிழில் தனக்கு ஏத்த மாதிரி ரோல்கள் கிடைக்கவில்லை என்று ஏங்கிய ஜோதிகா கடந்த ஆண்டு மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்த காதல் தி கோர் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்தடுத்து தீயாக வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார் ஜோதிகா.
தமிழில் முன்னணி கதாநாயகியாக விளங்கினாலும் இவரது தொடக்க புள்ளி என்னவோ பாலிவுட்டையே சார்ந்து இருந்தது 1997 ஆண்டு “Doli Saja Ke Rakhn” என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது பாலிவுட் ஆக்டர் அஜய் தேவகன் நடிப்பில் உருவாகி வரும் சைத்தான் படத்தில் ஜோதிகா மற்றும் மாதவன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தமிழில் இவர்கள் இணைந்த டும் டும் டும் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதற்குப்பின் 20 வருடங்கள் கழித்து இந்த ஜோடி மீண்டும் இணைகிறது.
சமீபத்தில் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் உடன் கூடிய இப்படத்திற்கான போஸ்டரை அஜய் தேவ்கன் வெளியிட்டுள்ளார். இப்படம் மார்ச் 8 தேதி மகளிர் தினத்தை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கண்டிப்பாக ஜோதிகாவுக்கு அழுத்தமான கதாபாத்திரம் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Also read: 2024 முதல் வாரம் ஓடிடியில் வெளியாகும் 13 படங்கள்.. மீண்டும் வசூலை குவிக்க வரும் ஜோதிகா