வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

47 வயசாகுது, 20 வருஷத்துக்கு முன்னாடியே அதெல்லாம் நிறுத்திட்டேன்.. ஓப்பனாக பேசிய ஜோதிகா

Jyothika: நடிகை ஜோதிகா பெரும்பாலும் மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். இதனால் பல நேரங்களில் அவர் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு.

அதிலும் தமிழில் தாண்டி மற்ற மொழி படங்களில் அவர் நடிக்கும் போது சொல்லப்படும் சில கருத்துக்கள் தமிழ் சினிமா பற்றி அவர் மட்டம் தட்டுகிறார் என்று திசை திருப்பப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடித்து முடித்துள்ள டப்பா கார்ட்டெல் என்ற வலைத்தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஓப்பனாக பேசிய ஜோதிகா

இந்த விழாவில் ஜோதிகா நிறைய விஷயங்களை பற்றி பகிர்ந்திருந்தார். அதில் ஒன்றுதான் தமிழ் படங்களில் அவர் திருமணத்திற்கு முன்பு நடித்தது.

காதல் திரைப்படங்கள், ஹீரோக்களுடன் டூயட் பாடுவது என்பதை 20 வருடங்களுக்கு முன்பே நான் நிறுத்தி விட்டேன்.

47 வயது எனக்கு ஆகிறது இதுவரை பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். டப்பா கார்ட்டெல் வலை தொடரும் அப்படி ஒரு கதை அம்சத்தை கொண்டது தான் என சொல்லி இருக்கிறார்.

Trending News