வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

திசை திருப்பிய நயன், போஸ்ட் போட்டு கவனம் ஈர்க்கும் ஜோ.. காதல் மனைவியின் கங்குவா ரிவியூ!

Nayanthara: ஒரு மனுஷன் கஷ்டப்பட்டு படம் அடிச்சா அதை யாராவது கண்டுக்கிறீர்களா என்று ஆகிவிட்டது கங்குவா படத்தின் நிலைமை. ஒரு படம் ரிலீஸ் ஆன பிறகு பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் எதுவாக இருந்தாலும் கொஞ்ச நாளைக்கு செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தால்தான் அந்தப் படத்துக்கு விளம்பரம்.

ஆனால் கங்குவா படத்திற்கு நடந்ததே வேறு. படம் ரிலீஸ் ஆன 14-ஆம் தேதி மற்றும் 15ஆம் தேதிகளில் தங்குவா படத்தில் விமர்சனங்கள் பெரும்பாலும் நெகட்டிவ்வாக அமைந்துவிட்டன. இதைத்தொடர்ந்து நேற்று மதியத்தில் இருந்து அந்தப் படத்தை பற்றி பேச ஆளே இல்லாமல் போனது.

அவங்க நடிச்ச படத்தோட வீடியோ தனுஷ் ஏன் காசு கேட்கிறார், காப்பிரைட் கேட்டா கொடுக்க வேண்டியது தானே நயன்தாராவுக்கு ஏன் இந்த வம்பு என மொத்த பஞ்சாயத்தையும் மாற்றி விட்டார்கள். அட என்னப்பா மூணு வருஷமா உசுர கொடுத்து நடித்திருக்கிறார், அதைப்பற்றி யாருமே பேச மாட்டீர்களா என சூர்யா ரசிகர்களுக்கு கோபம் வந்ததோ என்னவோ, அவருடைய காதல் மனைவி ஜோதிகாவிற்கு கோபம் வந்துவிட்டது போல.

இப்ப தும்முன்னா தான் கரெக்டா இருக்கும் என்று வார இறுதி நாள் ஆன ஞாயிற்றுக்கிழமையில் கொளுத்திப் போட்டு இருக்கிறார் ஜோதிகா. சூர்யாவின் மனைவியாக இல்ல, ஒரு சினிமா ரசிகையாக கங்குவா படத்தின் விமர்சனம் என்று எழுதி இருக்கிறார்.

காதல் மனைவியின் கங்குவா ரிவியூ!

ஜோதிகா தன்னுடைய பதிவில்,நான் இந்த கடிதத்தை ஒரு சினிமா காதலியாக, சூர்யாவின் மனைவியாக அல்லாமல் எழுதுகிறேன்.
கங்குவா – சினிமாவின் ஒரு பிரம்மாண்டம். சூர்யா, உன்னைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன், நீ ஒரு அசாதாரணமான நடிகராக இருப்பதற்கும், சினிமாவை முன்னேற்ற முயற்சிக்கின்றதற்கும். நீஎப்படி இந்த அளவுக்கு பெரிய கனவுகளை கண்டுபிடித்து, சினிமாவை புதிய உயரங்களில் எடுத்து செல்ல முயற்சிக்கிறாய் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

இந்த அளவுக்கு உயர்ந்த தொழில்நுட்பம் இல்லாத, பிரம்மாண்டம் இல்லாத படங்களில் எதுவுமே இல்லை என்றாலும் அந்த படங்கள் விமர்சனப்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு எதிராக இரட்டை அர்த்த வசனங்களோடு வெளியாகும் படங்களுக்கும் இது போன்ற நெகடிவ் விமர்சனங்கள் வெளிவருவதில்லை.

கங்குவா படத்தை பொருத்தவரைக்கும் முதல் காட்சி முடிவதற்குள்ளேயே நெகட்டிவ் விமர்சனங்கள் வேகமாக பரவத் தொடங்கி விட்டன. கங்குவா படத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளுக்கும் பாராட்டு கிடைக்க பட வேண்டும். கங்குவா படத்தை எடுத்த பட குழு நிஜமாகவே பெருமை கொள்ளுங்கள். இந்த படத்தை மோசமாக விமர்சிப்பவர்கள் யாரும் சினிமாவை தூக்கி பிடிக்க உங்கள் அளவுக்கு எந்த முயற்சியும் செய்யவில்லை என சொல்லி இருக்கிறார் ஜோதிகா.

Trending News