புதன்கிழமை, ஜனவரி 15, 2025

புது கணவருடன் ஸ்காட்ச் அடிக்கும் காஜல் அகர்வால்.. சியர்ஸ் சொல்லும் ரசிகர்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் அஜீத், விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார். திருமணம் ஆனாலும் அவர் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருகிறார். காஜல் இப்போது இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் விளம்பர படங்களில் நடிப்பதிலும் காஜல் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுபானத்தை விளம்பரப்படுத்தி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் காஜல் அகர்வால் தன் கணவருடன் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு சரக்கு அடிப்பது போல் இருக்கிறது அந்த போட்டோ. இந்த போட்டோவை வெளியிட்டு அந்த மதுபானத்தை 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தலாம் என்று அவர் விளம்பரப்படுத்தி உள்ளார். மேலும் நம்மை ரிலாக்ஸாக வைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது ரசிகர்கள் இதை விளம்பரப்படுத்துவது உங்களுக்கு வெக்கமா இல்லையா  என்று கேட்டுள்ளனர். ஒருபுறம் இதற்கு எதிர்ப்பு இருந்தாலும் மறுபுறம் ரசிகர்கள் அவருக்கு சியர்ஸ் என்று கமெண்ட் கூறுகின்றனர்.

அவர் மட்டுமல்லாமல் மற்ற சினிமா நடிகைகள் ராய் லட்சுமி, ஹன்சிகா, இலியானா போன்றவரும் இது போன்று மதுபானத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு சினிமாவில் நடிப்பதை விட அதிக பணம் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

kajalagarwal
kajalagarwal

Trending News