புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஏகே 62 உங்களுக்கு பொருத்தமான ஜோடி இவங்கதான்.. லைக்கா எடுத்து அதிரடி முடிவு

நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருடைய ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் தான். முதலில் அஜித்தின் 62 ஆவது படத்தை லைக்கா தயாரிக்கிறது என்ற செய்தி மட்டும் தான் உறுதியாகி இருந்தது.

ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்ட பிறகு அடுத்து இந்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற பிரச்சனையே மிகப்பெரிய அக்கப்போராக அமைந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இயக்குனர்கள் பெயர்கள் வெளியே வர இறுதியாக தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி தான் அடுத்து அஜித்தை இயக்குகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

Also Read: அஜித் மச்சானை வைத்து பூதாகரமாக வெடித்த பகாசூரன் சர்ச்சை.. அடையாளம் தெரியாமல் ரிச்சர்ட் வெளியிட்ட புகைப்படம்

இயக்குனர் உறுதியான பிறகும் ஏகே 62 படத்தின் பஞ்சாயத்து முடிவதாக இல்லை. சில வருடங்களாக நடிகர் அஜித் குமார் பெரிதாக தன்னுடைய படத்திற்கு இவர்தான் ஹீரோயின் ஆக நடிக்க வேண்டும் என்று அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் ஏகே 62 க்கு மட்டும் யார் ஹீரோயின் என்பது இன்று வரை இழுபறியாகத்தான் இருக்கிறது.

முதலில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று நம்பப்பட்டது, பின்னர் த்ரிஷாவில் தொடங்கி ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் என ஹீரோயின் தேர்வு நீண்டு கொண்டே சென்றதே தவிர அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதியாகவில்லை. தற்போது லைக்கா நிறுவனம் இந்த பஞ்சாயத்துக்கு முடிவு கட்டி இருக்கிறது.

Also Read: அஜித்தை விட விஜய் மோசமான வில்லன்.. உண்மையை உளறிக் கொட்டிய ஆதி குணசேகரன்

ஏகே 62 வில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாவாலை அஜித்திடம் பரிந்துரை செய்திருக்கிறார்கள் லைக்கா நிறுவனம். நடிகை காஜல் அகர்வால் ஏற்கனவே அஜித்துடன் விவேகம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த ஜோடி அப்போது பாசிட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றது.

இந்த நிலையில் லைக்கா தயாரித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் காஜல் அகர்வால் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் தான் லைக்கா காஜல் அகர்வாலை ஏகே 62 வில் நடிக்க வைக்க பிளான் போட்டு இருக்கிறார்கள். இது குறித்து தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ரீ-ரிலீஸ் செய்தால் வசூல் வேட்டையாடும் அஜித்தின் 5 படங்கள்.. இன்றும் ரஜினி ரசித்துப் பார்க்கும் படம்

Trending News