திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

இணையத்தில் மட்டமான வேலை செய்த கஜோல்.. பட விளம்பரத்திற்காக இப்படியெல்லாமா செய்வீங்க?

Actress Kajol: தமிழில் நடன இயக்குனர் பிரபுதேவா உடன் இணைந்து மின்சார கனவு படத்தில் நடித்தவர் நடிகை கஜோல் . தமிழில் சில படங்களில் நடித்த இவர் அதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அங்கு உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவரை தேடிவந்தது.

இப்போது வரை ஒரு பிசியான நடிகையாக கஜோல் இருந்து வருகிறார். படங்கள், வெப் சீரிஸ், விளம்பரங்கள் என அனைத்திலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இணையத்தில் அவரைப் பற்றிய ஒரு செய்தி பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை கஜோல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read : நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் பிரபுதேவாவின் மகன்.. வெளிநாட்டில் இருந்து வெளியான புகைப்படம்

சமீபகாலமாக இவர்களுக்குள் ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருப்பதாக ஊடகத்தில் செய்தி பரவி வந்தது. இந்த சூழலில் நேற்றைய தினம் திடீரென கஜோல் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார். அதாவது கஜோலை ட்விட்டரில் லட்சக்கணக்கானவர்களும், இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கானவர்களும் ஃபாலோவ் செய்து வருகிறார்கள்.

இந்த சூழலில் தற்போது தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் தான் இருக்கிறேன் என்று புகைப்படம் வெளியிட்டு தன்னுடைய முந்தைய பதிவுகள் எல்லாவற்றையும் நீக்கி இருந்தார். இதனால் கஜோல் ரசிகர்கள் குழப்பமடைந்து இருந்தனர். இப்போது அதற்கான காரணம் தெரிந்தவுடன் கடுப்பில் உள்ளனர் இணையவாசிகள்.

Also Read : பலான காட்சிக்கு கோடி கோடியாக சம்பளம் வாங்கிய 3 நடிகைகள்.. எல்லாரையும் ஓரம் கட்டிய தமன்னா

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக கஜோல் நடிக்கும் தி ட்ரையல் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதாவது தனது சமூக வலைத்தளங்களில் அதிக ஃபாலோவர்ஸ் உள்ளதால் இந்த மார்க்கெட் வித்தையை பயன்படுத்தி இருக்கிறார் கஜோல்.

ஒரு படத்தின் விளம்பரத்திற்காக கஜோல் இவ்வாறு செய்துள்ளது அவர் மேல் உள்ள மரியாதைக்கு இழுக்கு வரும்படி அமைந்துள்ளது. மேலும் இப்போது ட்விட்டரில் ஷேம் ஆன் கஜோல் ஹாட்ஸ்டார் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் கஜோலை மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

kajol
kajol

Also Read : பெட்ரூம் காட்சியில் தாராளம் காட்டிய மில்க் பியூட்டி.. ஷாக் கொடுத்த தமன்னாவின் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 டீஸர்

Trending News