வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நம்ம கரகாட்டக்காரன் கனகாவா இது? என்ன இப்படி ஆயிட்டாங்க.. அதிர்ச்சியாக்கிய புகைப்படம்

நடிகை தேவிகா என்பவரின் மகள்தான் நடிகை கனகா(kanaga). தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நாயகியாக 80களில் வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

கனகா நடிப்பில் வெளிவந்த கரகாட்டக்காரன் படம் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாக கனகா பற்றிய எந்த பேச்சுகளும் இல்லை.

2013ஆம் ஆண்டு கனகா இறந்துவிட்டதாக திடீரென தகவல்கள் பரவ ஆரம்பித்தது. உடனடியாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

பழம்பெரும் நடிகை தேவிகா பல படங்களில் நடித்து பிரபலமானவர். அவர் சம்பாதித்த ஏராளமான சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு கனகா மட்டும்தான். ஆகையால் கனகாவுக்கு அம்மாவின் சொத்துக்களை யாரும் பங்கு போட விருப்பம் இல்லையாம்.

இவ்வளவுநாளா உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது அங்கு வேலை செய்யும் சிலருக்கு மட்டும்தான் தெரியும். ஒரு பிரபலமான நடிகை சொத்துக்காக இவ்வளவு இறங்கி நடந்து கொள்வதா என பலரும் அவர் மீது அதிருப்தியில் உள்ளார்களாம்.

நீண்ட வருடங்கள் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்துள்ள கனகாவின் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

actress-kanaga-latest-photo
actress-kanaga-latest-photo

Trending News