தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு சிலகாலம் பிரேக் விட்டார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மிர்ச்சி சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ் படத்தில் இவர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.
இதுவரை கஸ்தூரியை குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்களுக்கு இந்த கவர்ச்சி நடனம் கற்று அதிர்ச்சியை கொடுத்தது. பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கஸ்தூரி கவனம் செலுத்தி நடித்து வந்தார்.
அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் போன வேகத்திலேயே போட்டியில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் கஸ்தூரி தன் மனதில் பட்ட விஷயங்களை பளிச்சென்று பேசக்கூடியவர். அதன் காரணமாக அவர் பல சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சமூக கருத்துள்ள பல விஷயங்களை தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் அவர் பதிவிட்டு வருகிறார்.
தற்போது அவர் மிகவும் கிளாமராக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். 47 வயதான கஸ்தூரி இந்த புகைப்படத்தில் வயது குறைந்து மிகவும் இளமையோடு காட்சி அளிக்கிறார்.
தற்போதைய ஹீரோயின்களுக்கே போட்டி போடும் வகையில் குட்டையான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது மேலும் இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு பத்து வயசு கம்மி ஆயிடுச்சு என்று புகழ்ந்து வருகின்றனர்.
