வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நான் நடிச்ச படத்தை நானே பார்க்க மாட்டேன்.. கேலி கிண்டலுக்கு ஆளான கீர்த்தி!

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் அளித்த பேட்டி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இவருடைய நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளிவந்த சாணி காகிதம் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆனால் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இவரது நடிப்பில் வெளியான ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சரிவை சந்தித்து கொண்டிருப்பதாய் சமீபத்தில் சோதனைக்காலம் ஏற்பட்டிருப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இவருடைய இந்த உருக்கமான அறிக்கை கடந்த சில தினங்களாக ரசிகர்களால் வைரலாகப் பேசிக் கொண்டிருந்த நிலையில், தற்போது இவர் அளித்த பேட்டி பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் கீர்த்தி சுரேஷ், ‘எப்போதுமே என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தி அளிக்காது. நடிப்பின் மீது இருக்கும் ஈடுபாடு காரணமாக இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய முழு முயற்சியை கொடுப்பேன்.

அப்படி கொடுத்தாலும் இன்னும் நன்றாக நடித்திருக்கலாமே என என்னுடைய மனம் மேலும் மேலும் எதிர்பார்க்கும். இதனால் அனைத்து விதமான கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நடிகையாக என்னுடைய நடிப்பை வெளிக்காட்ட முடியும். தன்னை நம்பி படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எந்தவித நஷ்டமும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.

பொதுவாக நான் நடிக்கும் படத்தை நானே பார்க்கவே மாட்டேன். அப்படிப் பார்த்தால் அதில் நான் செய்திருக்கும் தவறு என் கண்முன்னே வந்து நிற்கும். இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாமே என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும். இதற்காக படங்களை பார்க்க மாட்டேன்’ என அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷின் இந்தப் பேச்சைக் கேட்ட நெட்டிசன்கள், அதை வைத்து கேலி கிண்டலடிக்கின்றனர். ஏனென்றால் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தை அவரே பார்க்க முடியாது என்றால் நாங்கள் எப்படி பார்ப்போம் என்றும் நெட்டிசன்கள் பங்கம் செய்கின்றனர்.

Trending News