கீர்த்தி சுரேஷ் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அவர் நடித்துள்ள பேபி ஜான் விரைவில் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் அவர் திருமணம் இன்று கோவாவில் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கிறது.
தன்னுடைய நீண்ட நாள் காதலர் ஆண்டனியை தான் கீர்த்தி தற்போது கரம் பிடித்துள்ளார்.
இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்த நிலையில் திருமணமும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
இதில் கீர்த்தி மடிசார் புடவையில் கொள்ளை அழகாக இருக்கிறார்.
கழுத்தில் தாலி ஏறும் அந்த நிமிடத்தில் அவர் முகம் பூரிப்பில் சிவந்திருந்தது. இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.