தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதில் நம்ம கீதையை அதாங்க கீர்த்தி சாந்தனுவை பற்றி சுவாரசியமான தகவல்களை பார்ப்போம். கீர்த்தி சாந்தனு அனைவரும் செல்லமாக கீர்த்தி என்று கூப்பிடுவார்கள் அவர் தொகுப்பாளர் மட்டுமல்ல சிறந்த நடனம் ஆடுபவர். நடன இயக்குநர் ஜெயந்தி அவர்களின் மகள்தான் கீர்த்தி .
நடன இயக்குனர்களான கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் இருவரும் தாய்வழி சொந்தங்ல் அப்புறம் இவங்க டான்ஸ் ஆடுவதில் என்னங்க ஆச்சரியம். கீர்த்தி ஜீன் நடன திறமை இருக்குமே.
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் கீர்த்தி அவர் சிறந்த தொகுப்பாளினியாக அவரது பயணத்தை தொடங்கினார் .மேலும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக சிறந்து விளங்கினார்.
இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமா வின் மகனான சாந்தனுவை திருமணம் செய்துகொண்டார் கீர்த்தி. சாந்தனுவும் கீர்த்தியும் சிறு வயது முதலே நண்பர்கள் ஆவார்கள்.
தோழர்களே கணவன்-மனைவி ஆனது ஒரு வரமாகவே கருதுகிறேன் என்று சாந்தனு கூறியிருக்கிறார் . கணவன் மனைவி இருவரும் நண்பர்களாக இருந்தால் கடைசிவரை வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்று தலைவர் சூப்பர்ஸ்டார் தர்பார் படத்தில் கூறுவது போல அவர்களின் வாழ்க்கை அமைந்ததாக தோன்றுகிறது.
திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்திருந்தார். லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்து அவ்வப்போது தனது போட்டோக்களை அப்டேட் செய்கிறார் கீர்த்தி .அதில் அவர் உடற்பயிற்சி செய்வது போல அமைந்த போட்டோவில் உடலை வில்லாக வளைத்து லைக்கை அள்ளுகிறார்.
